Paristamil Navigation Paristamil advert login

மதிஸ் கொலை வழக்கு- நிர்வாகங்கள் திருந்த வேண்டும் - தந்தை வலியுறுத்தல்

மதிஸ் கொலை வழக்கு- நிர்வாகங்கள் திருந்த வேண்டும் - தந்தை வலியுறுத்தல்

27 வைகாசி 2025 செவ்வாய் 02:33 | பார்வைகள் : 2693


2024 ஏப்ரல் 27 அன்று 15 வயது மதிஸ் (Matisse) என்பவர் கத்தியால் பல முறை குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் சந்தேகிக்கப்படும் இளம் ஆண் மீது வழக்கு 2025 மே 26 அன்று சத்தோரூ (Châteauroux) நகரில் தொடங்கியுள்ளது. இந்த வழக்கானது மூடிய அறைக்குள் மூன்று நாட்களிற்கு நடக்கஉள்ளது.

 

 

வழக்கில் முக்கியமான அம்சங்கள்:

குற்றவாளி - உளநிலைச் சிக்கல்களில் இருக்கும் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த இளைஞர். சம்பவ நேரத்தின் போது இவனிற்கு வெறும் 15 வயது தான்.

இவன் ஏற்கனவே இரண்டு கத்திக் குத்துச் சம்பவங்களில் தொடர்புடையவராக இருந்துள்ளான்
.
வழக்கில் குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்ட இவர் பின்னர் பல மாறுபட்ட பதில்கள் அளித்துள்ளார்.

தந்தையின் மனவலி

ஒவ்வொரு நாளும் நான் அழுகிறேன். எப்போது என்று தெரியாது, எதற்காக என்று தெரியாது... இது ஒரு வருடமாக உணர்ச்சி மேலோங்கி தாங்க முடியாத நிலையாக உள்ளது.

இந்தச் சிவன் அங்கே இருக்கவே கூடாது, இது அவனது மூன்றாவது கத்திக்கொலை முயற்சி. சமூக சேவைகள் உரிய முறையில் தலையீடு செய்திருந்தால் என் மகனை நான் இழந்து இருக்க மாட்டேன். அவர்களின் அலட்சியம் உன் மகனின் உயிரைப் பறித்துள்ளது.

சாவடைந்த சிறுவனின் தந்தை வழக்கில் கடுமையான தண்டனைகள் வழங்கப்பட வேண்டும் எனக் கோருகிறார்.

நீதிக்காகவும், நிர்வாகங்களின் பிழைகள் திருத்தப்படவேண்டும் என்பதற்காகவும் தான் இந்த வழக்கை அவர் எதிர்கொள்கிறார் எனத் தெரிவித்த இவர் தனது வலி என்றும் தீராது ஆனால் இன்னொரு உயிர் இப்படிப் போய்விடக்டாது என்பதை காவற்துறை உட்படக் குறித்த நிர்வாகங்கள் உணர வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

12 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்

RAJADURAI

FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI

வயது : 44

இறப்பு : 14 Aug 2025

  • Ecology

    3

  • Live Link

வர்த்தக‌ விளம்பரங்கள்