மோனலிசாவின் மர்ம புன்னகை - விடைகாணமுடியாத மர்மம்! ( இறுதி பகுதி )
24 சித்திரை 2016 ஞாயிறு 11:13 | பார்வைகள் : 20060
இரண்டு நாட்களாக லூவர் அருங்காட்சியகம் பற்றியும், மோனலிசா ஓவியம் பற்றியும் பார்த்தோம். இன்று மோனலிசா ஓவியத்தை திருடிய ஒரு திருடன் பற்றி பாக்கபோகிறோம்...
பல சாதனைகள், கண்டுபிடிப்புகளை செய்து வரலாற்றில் இடம்பிடித்தவர்களை பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்கள். ஆனால் திருட்டு வேலை பார்த்ததால் உலகம் முழுவது அறியப்பட்டு, வரலாற்றில் இடம்பிடித்தவரை பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா??!! அப்படி ஒருவர் இருக்கிறார். அவர் பெயர் 'வின்சென்சோ பெருகியா'. (Vincenzo Peruggia) அவர் திருடியது மோனலிசா ஓவியத்தை.
1911ம் வருடம், ஓகஸ்ட் மாதம் 20ம் திகதி மாலை, லூவர் அருங்காட்சியகத்தின் பணியாளர்கள், லூவரை மூடிவிட்டு வீட்டுக்கு சென்று.. மறுநாள் காலை.. 21ம் திகதி வந்து லூவர் கதவை திறந்தால்... 'மோனலிசா ஓவியம்' வைக்கப்பட்ட இடத்தில் ஓவியத்தை காணவில்லை. தகவல் காட்டுத்தீயாய் பரவி.. காவல்துறைக்கு செய்தி வந்து சேர்ந்தது.
தேடுதல் வேட்டையின் முடிவில், மூன்று வருடங்கக் கழித்து.. இத்தாலியில் வைத்து வின்சென்சோ பெருகியா என்பவர், மோனலிசா ஓவியத்துடன் கைது செய்யப்பட்டார். வின்சென்சோ பெருகியா எனும் பெயர் உலகம் முழுவதும் பரவியது.
* முதல் நாள் இரவே லூவர்
அருங்காட்சியகத்திற்குள் தங்கி
இருந்து படத்தை திருடியிருக்கிறார்.
* திருடியபின் இரண்டு வருடங்களுக்கு
அந்த ஓவியத்துடன் பிரான்சில் தான்
பதுங்கி இருந்திருக்கிறார்.
* மோனலிசா எங்கள் நாட்டின் ஓவியம்
அதனால் தான் திருடினேன்' என
கைதுசெய்யப்பட்ட வின்சென்சோ
தெரிவித்தார்.
உண்மையில் இத்தாலியை சேர்ந்த லியனார்டோ டாவின்சி வரைந்த ஓவியத்தை, பிரெஞ்சு அரசன் அன்பளிப்பாக வாங்கி வர, அதன் பின்னர் தான் அவ் ஓவியத்தின் மதிப்பு அனைவருக்கும் தெரிய வந்தது. அவ் ஓவியத்தை எங்கள் நாட்டிற்கே கொண்டு வரவேண்டும் என வின்சென்சோ ஆசைப்பட்டிருக்கிறார். அதன் முயற்சிதான் இந்த திருட்டு சம்பவம் என தெரியவந்தது. அதன் பின் சிறிது காலத்திலேயே அவர் விடுவிக்கப்பட்டதுடன்... யாரும் எதிர்பாராத முதலாம் உலகப்போர் பரபரப்பாக தொடங்கலாயிற்று...!!
* மோனலிசா திருடன் ஒக்டோபர் மாதம், 8ம் திகதி, 1881 ல் இத்தாலியில் பிறந்தார்.
* மோனலிசா ஓவியம் மீண்டும் பிரான்சுக்கு வந்த ஆண்டு 1913.
* திருடப்பட்ட மோனலிசாவை யாருக்கும் விற்பதற்காக பேரம் பேசவில்லை என்பது பலத்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
* மோனலிசா திருடன் முதலாம் உலகப்போருக்கு பின்னர், திருமணம் செய்துகொண்டு பிரான்சில் வர்ணப்பூச்சு தொழிலாழியாக சில காலம் வேலை பார்த்தார். அவருக்கு Celestina எனும் ஒரு மகள் உண்டு.
* மோனலிசா திருட்டை மையமாக வைத்து சில தொலைக்காட்சி திரைப்படங்கள் கூட வெளியாகியிருக்கின்றன.
* மோனலிசா திருடன் 44 நான்காவது வயதில், தனது பிறந்தநாள் அன்று (ஒக்டோபர் 8) இறந்தான்.
அதன் பின் மோனலிசாவை யாரும் திருடவில்லை. இன்று ஆயுதங்கள் துளைக்கமுடியாத கண்ணாடிக்கு பின்னால் தன் மர்ம புன்னகையை வீசியபடி நின்றிருக்கிறாள் மோனலிசா!!