இங்கிலாந்தில் கோர விபத்து - 47 படுகாயம்

27 வைகாசி 2025 செவ்வாய் 09:02 | பார்வைகள் : 774
இங்கிலாந்தின் லிவர்பூலில் நடந்த கொண்டாட்ட அணிவகுப்பில் ஏற்ப்பட்ட கார் விபத்தில் 47 பேர் காயமடைந்துள்ளனர்.
லிவர்பூல் கால்பந்து கிளப்பின் வெற்றி அணிவகுப்பின் போது நேற்று (26) மதியம் இந்த விபத்து நிகழ்ந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
விபத்தில் காயமடைந்த 27 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், அவர்களில் ஒரு சிறு குழந்தை உட்பட மூன்று பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
விபத்து தொடர்பாக காரை ஓட்டிச் சென்ற 53 வயது பிரிட்டிஷ் நாட்டவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது பயங்கரவாதச் செயல் அல்ல என்று நாட்டின் பாதுகாப்புப் படையினர் தெரிவிக்கின்றனர்.