அல்-நாசர் அணியில் இருந்து விலகும் ரொனால்டோ…?

27 வைகாசி 2025 செவ்வாய் 11:47 | பார்வைகள் : 648
போர்ச்சுக்கல் நாட்டின் கால்பந்து வீரரான கிறிஸ்டியனா ரொனால்டோ, கால்பந்து உலகின் ஜாம்பவானாக வலம் வருகிறார்.
40 வயதான கிறிஸ்டியனா ரொனால்டோ சவுதி ப்ரோ கால்பந்து லீக்கில் கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் அல் நாசர் அணிக்காக விளையாடி வருகிறார்.
நேற்று முடிவடைந்த 2024-25 சவுதி ப்ரோ கால்பந்து லீக்கில் Al-Ittihad அணி கோப்பையை வென்றது. கிறிஸ்டியனா ரொனால்டோ விளையாடிய அல் நாசர் 3வது இடம் பிடித்தது.
இந்நிலையில் தொடர் முடிவடைந்ததும், ரொனால்டோ சமூகவலைத்தளத்தில் வெளியிட்ட பதிவு அவர் அணியில் இருந்து விலக உள்ளாரா என கேள்வி எழுப்பியுள்ளது.
அவர் வெளியிட்டுள்ள பதிவில், "இந்த அத்தியாயம் முடிந்துவிட்டது. ஆனால் கதை எழுதப்படும்" என தெரிவித்துள்ளார்.
ரொனால்டோ 2023 ஆம் ஆண்டு 227 மில்லியன் டொலருக்கு(இந்திய மதிப்பில் ரூ.1938 கோடி) ஒப்பந்தம் அல் நாசர் அணியால் ஒப்பந்தம் செய்யப்பட்டார்.
2025 ஜூன் 30 வரை அவரது ஒப்பந்தக் காலம் உள்ள நிலையில், ஒப்பந்தத்தை நீட்டிப்பது தொடர்பான பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படவில்லை.
எனவே அவர் அல் நாசர் அணியில் இருந்து வெளியேற உள்ளதாக கூறப்படுகிறது. பிரேசிலை சேர்ந்த கிளப் ஒன்று அவரை ஒப்பந்தம் செய்ய ஆர்வம் காட்டி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.