Paristamil Navigation Paristamil advert login

மோனலிசாவின் மர்ம புன்னகை - விடைகாணமுடியாத மர்மம்! ( பகுதி 2)

மோனலிசாவின் மர்ம புன்னகை - விடைகாணமுடியாத மர்மம்! ( பகுதி 2)

23 சித்திரை 2016 சனி 10:25 | பார்வைகள் : 19834


நேற்றைய தினம் லூவர் அருங்காட்சியகத்தை பற்றி தெரிந்துகொண்டோம்.. இன்று மோனலிசா ஓவியம் பற்றி தெரிந்துகொள்வோம். 
 
'மோனலிசா ஓவியம்' என்ற வார்த்தை உலக மக்களில் 64% வீதமானவர்களுக்கு தெரியுமாம். லியார்னாடோ டாவின்ஸி எனும் புகழ்பெற்ற ஓவியர் வரைந்த உலகப்புகழ்பெற்ற ஓவியம் இது. 
 
டாவின்ஸியின் நண்பரான Francesco del Giocondoவின் மனைவியார் தான் இந்த மோனலிசா. Lisa Gherardini அவரின் பெயர். அவரை 'மொடல்'லாக கொண்டு, டாவின்ஸி 1503 தொடக்கம் 1506 வரையான நான்கு வருடங்களில் வரைந்த ஓவியம் தான் இன்று உலக மக்களால் கொண்டாடப்பட்டு வருகிற 'மோனோலிசா!'
 
டாவின்சியிடம் இருந்து பிரெஞ்சு மன்னன் King Francis I, இந்த ஓவியத்தை பரிசாக பெற்றுக்கொண்டானாம். அன்று முதல் அது பிரான்சின் அரச உடமை ஆனது.  பின்னர் 1797 ஆம் ஆண்டு அது, லூவர் அருங்காட்சியகத்திற்கு வந்தது. 
 
ஆனால் அதன் பின் தான் பிரெஞ்சு அரசுக்கு இந்த ஓவியத்தை கட்டிக்காப்பதில் உள்ள சிக்கல் புரிந்தது. Franco-Prussian யுத்தம் இடம்பெற்றபோது, மோனலிசாவை பத்திரமாக பிரெஞ்சு அரசு, லூவர் அருங்காட்சியகத்தில் இருந்து வெளியே கொண்டுசென்று, பாதுகாத்து வைத்தது. 
 
அதன் பின்னர் இரண்டாம் உலகமகா யுத்தம் ஆரம்பித்ததும், மீண்டும் மோனலிசா லூவரில் இருந்து வெளியே எடுக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டது. நாஜி படையினர் லூவர் அருங்காட்சியகத்தை கைப்பற்றி, அதை 'களஞ்சிய கூடம்'மாக பயன் படுத்தினார்கள். நல்லவேளையாக மோனலிசா அப்போது அங்கு இல்லை. 
 
1962ஆம் ஆண்டு மோனலிசாவின் பெறுமதி, 100 மில்லியன் அமெரிக்க டொலர்கள். இப்போது விலை மதிப்பீடு செய்வதையே விட்டுவிட்டார்கள். 
 
நாஜி படைகளிடமிருந்தே  காப்பாற்றிய மோனலிசாவை, ஒரு பலே திருடன் திருடிவிட்டான்!!  யார் அந்த திருடன்... ஏன் மோனலிசாவை திருடினான்..??!! நாளை தொடர்ந்து படிக்கலாம்....