நைஜீரியாவில் அதிகரிக்கும் பாலியல் பலாத்காரம் - ஐ.நா. அறிக்கை

27 வைகாசி 2025 செவ்வாய் 15:40 | பார்வைகள் : 682
ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் பெண்கள், சிறுமிகள் உள்பட சுமார் 4 ஆயிரம் பேர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளதாக ஐ.நா. அமைப்பு சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
நைஜீரியாவில் ஆளும் அரசாங்கத்தை எதிர்த்து பல்வேறு இனக்குழுக்கள், பயங்கரவாதிகள் குழுவினர், கிளர்ச்சியாளர்கள் போராடி வருகிறார்கள். அவர்கள் அவ்வப்போது அங்குள்ள கிராமங்களுக்குள் புகுந்து சூறையாடி கொள்ளை சம்பவத்தில் ஈடுபடுகிறார்கள்.
கடந்த சில நாள்களுக்கு முன்னர் அங்குள்ள கிராமத்திற்குள் புகுந்து துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் ஏராளமானவர்கள கொல்லப்பட்டனர்.
கிளர்ச்சியாளர்கள் தாக்குதலை கட்டுப்படுத்த ஐ.நா சார்பில் அமைதிப்படை வீரர்கள் களம் இறக்கப்பட்டு உள்நாட்டு ராணுவத்துடன் போராடி வருகிறார்கள்.
இந்த நிலையில் நைஜீரியாவில் களநிலவரம் குறித்து ஐ.நா. அமைப்பு சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி கடந்த 4 ஆண்டுகளில் நைஜீரியாவில் 700 பேர் உயிரிழந்துள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பெண்கள், சிறுமிகள் உள்பட சுமார் 4 ஆயிரம் பேர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளது.