சிம்புவின் அடுத்த படத்தில் ஜாக்கிசான் ?

27 வைகாசி 2025 செவ்வாய் 15:41 | பார்வைகள் : 345
சிம்புவின் அடுத்த படத்தில் ஜாக்கிசான் நடிக்க இருப்பதாகவும், அது மட்டுமல்ல, இந்த படத்தில் மோகன்லால் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிம்பு ஏற்கனவே மூன்று படங்களில் நடிக்க கமிட்டாக இருக்கும் நிலையில், தற்போது "எஸ்.டி.ஆர். 49" என்ற படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை அடுத்து, எஸ்.டி.ஆர். 50-வது திரைப்படத்தை தேசிங்கு பெரியசாமி இயக்கும் நிலையில், "2018" என்ற படத்தை இயக்கிய ஜூட் அந்தோனி ஜோசப் இயக்கத்தில் சிம்பு ஒரு படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த படம் பிரமாண்டமாக உருவாக இருப்பதாகவும், இந்த படத்தில் சிம்பு மட்டும் இல்லாமல் ஜாக்கிசான் மற்றும் மோகன்லால் ஆகிய இருவரும் முக்கிய கேரக்டரில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. எனவே, இந்த படம் ஒரு பான் இந்திய படமாக இல்லாமல், பான் வேர்ல்ட் படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இருப்பினும், இந்த படம் தொடங்க குறைந்தது இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் ஆகும் என்று கூறப்படுகிறது. கடந்த மூன்று மாதங்களுக்கு முன் சிம்பு, ஜப்பான் சென்றபோது, ஜாக்கிசானை நேரில் சந்தித்து பேசியதாகவும், அப்போதுதான் இந்த படம் குறித்து ஆலோசனை செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது