விஜய் டிவி பிரியங்கா கர்ப்பமா?

27 வைகாசி 2025 செவ்வாய் 16:41 | பார்வைகள் : 519
விஜய் டிவி பிரியங்காவுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்னர் தான் திருமணம் நடந்த நிலையில், அவர் கர்ப்பமாக இருப்பதாக சமூக வலைதளங்களில் ஒரு வதந்தி மிக வேகமாக பரவி வருகிறது.
அந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், "உங்க வாய் உங்க உருட்டு" என்ற வாசகம் கொண்ட டீ ஷர்ட் அணிந்து, இன்ஸ்டாகிராமில் அவர் ஒரு பதிவை செய்துள்ளார். அந்த பதிவு தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
விஜய் டிவியின் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தவர் பிரியங்கா. சமீபத்தில், அவர் டிஜே வஷி என்பவரை திருமணம் செய்துள்ளார். தற்போது, அவர்கள் லண்டனில் தேனிலவு அனுபவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், பிரியங்கா கர்ப்பமாக இருப்பதாக சமூக வலைதளங்கள் மற்றும் யூடியூப்பில் வதந்திகள் வலம் வந்தன.
இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, "உங்க வாய் உங்க உருட்டு" என்ற கேப்ஷன் அடங்கிய டி-ஷர்ட் அணிந்த புகைப்படத்தை அவர் பதிவு செய்துள்ளார். மேலும், அவர் குபீரென சிரிக்கும் போஸ் கொடுத்து உள்ளார்.
இதன் மூலம், தன்னைப் பற்றி வரும் வதந்திகளை பார்த்தால் சிரிப்புதான் வருகிறது என்பதை அவர் சொல்லாமல் சொல்லியிருக்கிறார் என கூறப்படுகிறது. இருப்பினும், இந்த பதிவுக்கு ஏராளமான கேலி, கிண்டலான கமெண்ட்கள் பதிவாகி உள்ளன. உங்களை விட யார் பெரிதாக உருட்ட முடியும், உருட்டோட ஒனரே தாங்கள் தானே ராஜகுரு , உங்களுக்கு நீங்களே சொல்லிக்கிறீங்களா, என கமெண்ட்ஸ் பதிவாகி வருகின்றன.