Paristamil Navigation Paristamil advert login

இயல்பை விட வெப்பமான கோடை காலம்!

இயல்பை விட வெப்பமான கோடை காலம்!

27 வைகாசி 2025 செவ்வாய் 16:02 | பார்வைகள் : 2650


இந்த ஆண்டு கோடை இயல்பை விட அதிக வெப்பம் கொண்டதாக இருக்கக்கூடும் என Météo பிரான்ஸ் தெரிவித்துள்ளது. இது காலநிலை மாற்றத்தால் ஏற்படும் போக்குகளுடன் தொடர்புடையதாக கூறப்படுகிறது. 

இந்த வாய்ப்பு நாட்டின் அளவில் 50% என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. Courseஇல் இந்த வாய்ப்பு 60% ஆக உள்ளது. ஆனால், இது வெறும் ஒரு சராசரி கணிப்பே; சில நாட்களில் குளிர்ச்சியான வானிலைவும் ஏற்படலாம். மழை தொடர்பாக எந்த ஒரு நிலையும் மேலோங்கியதாக இல்லை. 

இத்தகைய பருவநிலை முன்னறிவிப்புகள் தற்போதைய காலத்தில் குறைவான நம்பகத்தன்மையுடன் உள்ளன. கடந்த ஆண்டுகளில் இருந்ததைவிட இப்போது இந்த கணிப்புகள் குறைவாக உறுதிப்படுத்தப்படுகின்றன. 

காலநிலை மாற்றத்தால் ஏற்படும் மாறுபாடுகளை வானிலை மாதிரிகள் சரியாக கணிக்காமல் போவது என குறிப்பிடப்படுகிறது. மேலும், அமெரிக்கா உலக வானிலை அமைப்புக்கு நிதியளிக்க மறுத்ததமையும் முன்னறிவிப்புகளின் தரத்தை பாதித்துள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்