Paristamil Navigation Paristamil advert login

சூர்யா 46’ படத்தில் நடிக்க மறுக்க பிரபல நடிகை….. காரணம் என்ன?

சூர்யா 46’ படத்தில் நடிக்க மறுக்க பிரபல நடிகை….. காரணம் என்ன?

27 வைகாசி 2025 செவ்வாய் 17:41 | பார்வைகள் : 1208


தமிழ் சினிமாவில் டாப் நடிகர்களில் ஒருவரான சூர்யா தற்போது ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் தனது 45 வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படமானது இந்த ஆண்டு அக்டோபர் மாதம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில் சூர்யா, வாத்தி, லக்கி பாஸ்கர் ஆகிய படங்களை இயக்கிய வெங்கி அட்லுரி இயக்கத்தில் புதிய படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாக இருக்கிறார். இந்த படத்திற்கு தற்காலிகமாக சூர்யா 46 என்று தலைப்பு வைக்கப்பட்டிருக்கிறது. இந்த படத்தை சித்தாரா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்க ஜி.வி. பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைக்க உள்ளார்.

சமீபத்தில் இந்த படத்தின் பூஜை சிறப்பாக நடந்து முடிந்தது. வருகின்ற மே 30 அன்று இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் எனவும் படத்தை அடுத்த ஆண்டு மே 1ம் தேதி திரைக்கு கொண்டு வர படக்குழு திட்டமிட்டு வருவதாகவும் சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையில் இந்த படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷை கதாநாயகியாக நடிக்க வைக்க படக்குழு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக செய்திகள் வெளியானது.

ஆனால் தற்போது கிடைத்த தகவல் என்னவென்றால், கீர்த்தி சுரேஷ் இந்த படத்தில் நடிக்க மறுத்துவிட்டதாக சொல்லப்படுகிறது. அதாவது நடிகை கீர்த்தி சுரேஷ், திருமணத்திற்கு பின்னர் விஜய் தேவரகொண்டாவின் புதிய படம் ஒன்றில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகி இருக்கிறாராம். எனவே கால்ஷீட் காரணமாக சூர்யா 46 படத்தில் அவர் நடிக்கவில்லையாம். மேலும் இப்படத்தில் நடிகை மமிதா பைஜூ கதாநாயகியாக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்