காஸா யுத்தம் : பிரெஞ்சு பாராளுமன்றத்தில் விவாதிக்க மறுப்பு.. சர்ச்சை!!

27 வைகாசி 2025 செவ்வாய் 20:28 | பார்வைகள் : 955
காஸா யுத்தத்தில் இதுவரை 53,000 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். உலகம் முழுவதும் பெரும் கண்டனக்குரல்கள் பதிவாகிவரும் நிலையில், பிரெஞ்சு பாராளுமன்றத்தில் இது தொடர்பாக விவாதிக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இது பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.
மனிதாபிமானமற்ற தாக்குதலுக்கு எதிரான நிலைப்பாட்டுடன் பிரான்ஸ் உள்ளது. காஸாவில் உள்ள பொது மக்களுக்கு உதவி வழங்கி ஆதரிப்பதை கடமையாக கொண்டுள்ளது. மனிதாபிமான ரீதியாகவும், இராஜந்தந்திர ரீதியாகவும் பிரான்ஸ் முழுமையாக அணிதிரட்டப்பட்டுள்ளது!:” என பிரதமர் பிரான்சுவா பெய்ரூ தெரிவித்தார்.
இன்று மே 27, செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில் காஸா தொடர்பில் விவாதிப்பதை நிராகரித்துள்ளார். அது தொடர்பில் கேள்வி எழுப்பட்ட போதே இதனை அவர் குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில், ”அதிக சுமை" கொண்ட பாராளுமன்ற நிகழ்ச்சி நிரல் காரணமாக" விவாதம் நிராகரிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.