● கொவிட் 19 - புதிய திரிபு பிரான்சில் கண்டுபிடிப்பு!!

27 வைகாசி 2025 செவ்வாய் 20:28 | பார்வைகள் : 3482
ஆசிய நாடுகளில் மீண்டும் பரவ ஆரம்பித்துள்ள கொவிட் 19 வைரஸ், தற்போது பிரான்சில் கண்டறியப்பட்டுள்ளது.
NB.1.8.1 என பெயரிடப்பட்டுள்ள இந்த வைரஸ் பிரான்சில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக Centre national de référence (CNR) அறிவித்துள்ளது. ஆனால் இது குறித்து மேலதிக விபரங்களை தற்போது வெளியிடமுடியாது எனவும், சில நாட்களின் பின்னரே விபரங்கள் வெளியிட முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், கிடைக்கப்பெற்ற தகவல்களின் படி Lyon, Toulouse, Auvergne-Rhône-Alpes நகரங்களில் ‘நான்கு’ வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், பிரான்சில் கொவிட் 19 வைரஸ் மற்றுமொரு சுற்று வார வாய்ப்புள்ளதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

RAJADURAI
FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI
வயது : 44
இறப்பு : 14 Aug 2025
-
3