Paristamil Navigation Paristamil advert login

பிரான்சுக்கான நோபல் பரிசு - ஒரு முடிவில்லா சரித்திரம்

பிரான்சுக்கான நோபல் பரிசு - ஒரு முடிவில்லா சரித்திரம்

21 சித்திரை 2016 வியாழன் 11:28 | பார்வைகள் : 23362


உலகம் முழுவதிலும் இருந்து தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த இலக்கியத்துக்கு நோபல் பரிசு வருடாவருடம் வழங்கப்பட்டு வருகிறது. உலக இலக்கியவாதிகளுக்கான சிறந்த கெளரவமான விருதாகவும், பெருங் கனவாகவும் இந்த நோபல் பரிசு இருக்கிறது. 
 
1901 ஆம் ஆண்டு முதன் முதலாக சிறந்த இலக்கியத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. முதலாவது நோபல் பரிசு கிடைத்ததே எங்கள் பிரான்சுக்குத்தான். பிரான்சின் புகழ்பெற்ற எழுத்தாளர் Sully Prudhomme க்கு இந்த விருது கிடைத்தது. 
 
தொடர்ந்து இரண்டாவது விருது, ஜெர்மனியை சேர்ந்த Theodor Mommseக்கு கிடைத்தது. பிரான்சுக்கான இரண்டாவது விருது Frédéric Mistral இற்கு, 1904ம் ஆண்டு கிடைத்தது. பின்னர் அது தொடர்கதையாகிப்போனது. 
 
1901ம் ஆண்டில் இருந்து 2015ஆம் ஆண்டு 112 விருதுகள் இதுவரை இலக்கியத்திற்காக வழங்கப்பட்டுள்ளது. இதில் அதிக விருதுகளை வாங்கிய நாடாக, அமெரிக்காவையும் பிரித்தானியாவையும் பின்னுக்கு தள்ளி, முதலாம் இடத்தில் பிரான்ஸ் இருக்கிறது. 
 
மொத்தம் 15 விருதுகள் பிரான்சுக்கும், தலா 10 விருதுகள் அமெரிக்காவுக்கும், பிரிதானியாவுக்கும் கிடைத்திருக்கிறது. இந்தியாவை சேர்ந்த ரவீந்திரநாத் தாகூருக்கும் ஒரு நோபல் பரிசு கிடைத்திருக்கிறது என்பதும் கூடுதல் செய்தி!

வர்த்தக‌ விளம்பரங்கள்