உடல் பருமனை குறைக்கும் மருந்துகளை பரிந்துரைக்க அரசு அனுமதி!

27 வைகாசி 2025 செவ்வாய் 21:57 | பார்வைகள் : 3610
பொது மருத்துவர்களுக்கும் (médecins généralistes) Wegovy மற்றும் Mounjaro என்ற இரண்டு அதிநவீன உடல் பருமனை குறைக்கும் மருந்துகளை பரிந்துரை செய்ய அனுமதி அளிக்க அரசு திட்டமிட்டுள்ளது.
இம்மருந்துகள் தற்போது சிறப்பு மருத்துவர்களால் மட்டுமே பரிந்துரைக்கப்படுகின்றன. இந்த மருந்துகள் சராசரியாக ஒரு நோயாளியின் எடையின் 15% வரை குறைக்கின்றன.
வாரத்திற்கு ஒரு முறை வயிற்றில் ஊசி செலுத்தி பயன்படுத்த வேண்டிய இம்மருந்துகள், தற்போது நிதியுதவி (remboursement) இல்லாமல் மாதத்திற்கு சுமார் 300 யூரோ செலவாகின்றன.
பொது மருத்துவர்களும் பரிந்துரை செய்ய அதிகாரம் பெறும் வகையில் மருந்து பாதுகாப்பு நிறுவனம் (ANSM) அதிகாரபூர்வ செயல்முறை ஒன்றை தொடங்கவுள்ளது.
இது சுமார் ஒரு மாதத்தில் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், எல்லோருக்கும் இம்மருந்துகள் கிடைக்காது; BMI 35-க்கும் மேல் உள்ள தீவிரநோய் நிலையுடையவர்கள் மற்றும் ஏனைய சிகிச்சைகள் பலனளிக்காதவர்கள் மட்டுமே இதற்குத் தகுதியானவர்கள்.
இந்த நடவடிக்கை பரிசீலனையின் இறுதி கட்டத்தில் உள்ளது என்றும், கோடைக்கு முன்னதாகவே அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்க விரும்புவதாக அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர்.
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

RAJADURAI
FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI
வயது : 44
இறப்பு : 14 Aug 2025
-
3