பரிஸ் : €334 மில்லியன் பெறுமதியான சேதத்தை ஏற்படுத்திய ஆலங்கட்டி மழை!!

27 வைகாசி 2025 செவ்வாய் 23:49 | பார்வைகள் : 4605
பரிசில் கடந்த மே 3 ஆம் திகதி பாரிய சத்தத்துடன் ஆலங்கட்டி மழை கொட்டித்தீர்த்திருந்தது. கோல்ஃப் பந்தின் அளவில் எல்லாம் ஆலங்கட்டி கொட்டியிருந்ததாக பரிஸ் மக்கள் சமூகவலைத்தளங்களில் புகைப்படங்கள் பதிவிட்டிருந்தனர்.
இந்நிலையில், அன்றைய ஒரு நாளில் பெய்த மழையினால் ஏற்பட்ட பாதிப்புகளுக்காக €334 மில்லியன் யூரோக்கள் காப்புறுதி கோரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இவற்றில் €196 மில்லியன் யூரோக்கள் தொகை வாகன உரிமையாளர்களால் கோரப்பட்டுள்ளது. ஆலங்கட்டி மழை ஏராளமான வாகனங்களை சேதப்படுத்தியுள்ளன.
€116.9 மில்லியன் யூரோக்கள் தனியார் சொத்துக்களை சேதப்படுத்தியுள்ளன. €14 மில்லியன் விவசாய சேதத்தையும் ஏற்படுத்தியுள்ளன.
ஆலங்கட்டி மழை ஆறுமாதத்துகாக வாகன காப்புறுதி பெறுமதியை ஒரே நாளில் ஏற்படுத்தியுள்ளதாக காப்புறுதி நிறுவனங்களின் கூட்டு அதிகார சபை அறிவித்துள்ளது.
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

RAJADURAI
FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI
வயது : 44
இறப்பு : 14 Aug 2025
-
3