Nestle நிறுவனத்தின் ஊழலை மூடி மறைத்ததா பிரெஞ்சு அரசு..??!!

28 வைகாசி 2025 புதன் 01:16 | பார்வைகள் : 2125
Nestle நிறுவனத்துக்குச் சொந்தமான Perrier தண்ணீர் போத்தல் விற்பனையில் ஊழல் இடம்பெற்றதாகவும், அதனை பிரெஞ்சு அரசு மூடி மறைத்துள்ளதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்த குற்றச்சாட்டினை பிரெஞ்சு செனட் மேற்சபை வெளியிட்டுள்ளது.
குறித்த நிறுவனத்தின் தண்ணீர் ”இயற்கை மினரல்ஸ் கொண்ட தண்ணீர்” என விளம்பரப்படுத்தி கடந்த 35 ஆண்டுகளாக ஐரோப்பா முழுவதும் விற்பனை செய்து வருகிறது.
இந்நிலையில், ”இயற்கை மினரல் தண்ணீர்” என சந்தைப்படுத்தப்படும் எந்தவொரு தயாரிப்புக்கும் ”என்ன சிகிச்சைகள் அனுமதிக்கப்படுகின்றன?” என்பதை ஐரோப்பிய ஒன்றிய விதிமுறைகள் கண்டிப்பாக கட்டுப்படுத்துகின்றன.
“நெஸ்லே நிறுவனத்தின் தண்ணீர் தயாரிப்பில் வெளிப்படைத்தன்மை இல்லை என்பதை உள்ளூர் மற்றும் ஐரோப்பிய மக்கள் நம்புகின்றனர்.. அதில் வெளிப்படைத்தன்மை இல்லை எனும் குற்றச்சாட்டை பிரெஞ்சு அரசு ஏற்றுக்கொண்டு நடவடிக்கை எடுக்கவேண்டும்” என செனட் சபையின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நான்கு ஆண்டுகளாக இந்த குற்றச்சாட்டு இருந்துவரும் நிலையில், கடந்த ஆறு மாதங்களாக இது தொடர்பான விசாரணைகளை செனட் சபை மேற்கொண்டுள்ளது. 70 தடவைகள் விளக்கமளிக்க அழைக்கப்பட்டுள்ளது. இருந்தபோதும் கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளுக்குப் பிறகும், வெளிப்படைத்தன்மை இன்னும் அடையப்படவில்லை," என செனட் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சென்ற ஆண்டோடு ஒப்பிடுகையில், Perrier தண்ணீர் போத்தலின் விற்பனை ஐரோப்பிய அளவில் 14% சதவீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.