Paristamil Navigation Paristamil advert login

இறக்கும் உரிமையை அனுமதித்த பிரெஞ்சு பாராளுமன்றம்!!

இறக்கும் உரிமையை அனுமதித்த பிரெஞ்சு பாராளுமன்றம்!!

28 வைகாசி 2025 புதன் 07:07 | பார்வைகள் : 1728


நோய்வாய்ப்பட்டு உயிருக்கு போராடிக்கொண்டிருக்கும் நோயாளிகளுக்கு இறக்கும் உரிமையை வழங்கும் சட்டம் ஒன்றை பிரெஞ்சு பாராளுமன்றம் அனுமதித்துள்ளது.

நேற்று மே 27 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில் மேற்கொள்ளப்பட்ட வாக்கெடுப்பில் இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டத்துக்கு ஆதரவாக 305 வாக்குகளும், எதிராக 199 வாக்குகளும் பதிவாகின.  "இது மிகவும் முக்கியமான ஒரு முடிவாகும். ஆதரவு வாக்களித்து நிறைவேற்றப்பட்டமை வரவேற்கப்படவேண்டிதாகும்!" என ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் குறிப்பிட்டார்.

18 வயது நிரம்பிய எந்த ஒரு நோயாளியும் இந்த சட்டத்தை பயன்படுத்தி இறப்பதற்கான கோரிக்கையை முன்வைக்க முடியும். மருத்துவச் சான்றிதழும், மருத்துவர்களின் ஒப்புதலும் கட்டாயமானதாகும்.

'குணப்படுத்தமுடியாத தீவிரமான நோய்' என்பதை மருத்துவர்கள் உறுதிப்படுத்திய பின்னரே இந்த கோரிக்கையை முன்வைக்க முடியும் என தெரிவிக்கப்படுகிறது.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்