Paristamil Navigation Paristamil advert login

அஸ்ஸென்சியோன் விடுமுறை - இல்-து-பிரான்சில் கடுமையான வாகன நெரிசல் – எச்சரிக்கை

அஸ்ஸென்சியோன் விடுமுறை - இல்-து-பிரான்சில் கடுமையான வாகன நெரிசல் – எச்சரிக்கை

28 வைகாசி 2025 புதன் 08:08 | பார்வைகள் : 2367


அஸ்ஸென்சியோன் (Ascension) கிறிஸ்தவ பண்டிகையை ஒட்டிய நீண்ட விடுமுறை வார இறுதியில், இல்-து-பிரான்சில் வாகன நெரிசல் அதிகம் இருக்கும் என  Bison futé எச்சரிக்கை விடுத்துள்ளது.

புதன் (28 மே) மற்றும் வியாழன் (29 மே): சிவப்பு (ROUGE) நாட்கள்
புறப்படும் திசையில் முழு நாடும் சிவப்பு நாட்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.

அதிக போக்குவரத்து ஏற்படக்கூடிய பாதைகள்:

A6, A13 (பாரிஸ் வழியாக புறப்படும் வழிகள்)
A7, A9 (தெற்குப் பகுதியில்)
A11, யA63 (அட்லாண்டிக் கடற்கரை)

ஞாயிறு (1 ஜூன்): கறுப்பு (NOIR) - மிக மோசமான நாள்

மீண்டும் திரும்பும் திசையில், கடுமையான போக்குவரத்து நெரிசல் எதிர்பார்க்கப்படுகிறது.

Noir (கறுப்பு) வகை – மிக அதிக நெரிசல், குறிப்பாக மேற்கு பிரான்ஸ் (Grand Ouest).

முக்கிய பாதைகள்:
A13, A11, A81, RN165
A63 (தென் மேற்கு)
A7, A9, A61 (மத்தியதரைக் கடற்கரை)
Mont-Blanc  சுரங்கப் பாதை (Auvergne-Rhône-Alpes)

பயணத்திற்கு சிறந்த நேரம்:

ஞாயிறு 1 ஜூன் அன்று, காலை 10 மணி முன் அல்லது நள்ளிரவுக்கு பின் பயணிக்க வேண்டும் என Bison futé பரிந்துரை செய்கின்றது.
 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்