மரண உதவி உரிமை - புதிய சட்டம் என்ன கூறுகின்றது - முழுமையான விபரம்!

28 வைகாசி 2025 புதன் 09:08 | பார்வைகள் : 1907
27 மே 2025 அன்று, பாராளுமன்றத்தில் புதிய மரண உதவி உரிமை (auto-administration) தொடர்பான சட்டத்தை முதல் வாசிப்பில் தொகுதி அளவில் நிறைவேற்றியது.
இந்தச் சட்டத்தின் அடிப்படையில்
தகுதி பெற வேண்டிய முக்கியமான 5 நிபந்தனைகள்
18 வயதுக்கு மேற்பட்டவர் ஆக இருக்க வேண்டும்.
பிரெஞ்சு குடியுரிமை அல்லது நாட்டில் சீரான மற்றும் சட்டப்படி வாழும் நிலை வேண்டும்.
சிகிச்சை மற்றும் பரிசோதனையற்ற நோயால் பாதிக்கப்பட்டிருப்பதுடன், அது வாழ்நாள் அபாயத்தில் உள்ளதாகவும், முன்னேற்றமற்ற நிலை எனவும் இருக்க வேண்டும்.
தாங்கமுடியாத உடல் அல்லது உளவியல் வேதனை, சிகிச்சைக்கு பதிலளிக்காத வகையில் இருக்க வேண்டும்.
தங்கள் விருப்பத்தை சுதந்திரமாக மற்றும் தெளிவாக வெளிப்படுத்தும் திறன் இருக்க வேண்டும்.
குறிப்பு: மனவேதனை மட்டுமே இல்லாமல், உடல் பாதிப்பு அவசியம் எனவும் Horizons மற்றும் Républicains பாராளுமன்ற உறுப்பினர்கள் திருத்தம் கொண்டு வந்துள்ளனர்.
மருத்துவ முடிவுகள் மற்றும் நடைமுறை:
முடிவை 2 மருத்துவர்கள் மற்றும் ஒரு சுகாதாரப்பணியாளர் கொண்ட குழு வழங்க வேண்டும்.
நேரில் வர இயலாதவர்கள் காணொளி வழியே கலந்துகொள்ள முடியும்,
மருத்துவர்கள் தீர்மானித்த பிறகு, நோயாளி உறுதிப்படுத்த 2 நாட்கள் இடைவேளை அவசியம்.
தீர்மானம் 3 மாதத்திற்கு மேல் தாமதிக்கப்பட்டால், நோயாளியின் விருப்பம் மறுபரிசீலனை செய்யப்படும்.
உயிர்கொல்லி மருந்து தரும் முறை
நோயாளியே மருந்தை செலுத்த வேண்டும் (auto-administration).
தன்னாற்றல் இல்லாத இடத்தில், மருத்துவர் அல்லது செவிலியர் உதவி செய்யலாம்.
மருத்துவருக்கு உளவியல் ஒப்புதல் மறுப்பு (Clause de conscience) இருந்தால மருத்துவர்களுக்கு இந்த செயலை செய்ய மறுக்கும் உரிமை உள்ளது.
ஆனால் மருந்து வழங்கும் மருந்தகத்தார்களுக்கு இந்த உரிமை இல்லை.
மரண உதவி செய்பவர்களைப் பதிவுசெய்து, சட்டவிரோதம் மற்றும் ஒழுக்கக் குறைகளை கண்காணிக்கும் தனிச்சிறப்பு ஆணையம் உருவாக்கப்படும்.
மரண உதவி செயலுக்கு இடையூறு செய்தால், அதுவும் மனவியல் அழுத்தம், மிரட்டல், தடைசெய்தல் ஆகியவை இருந்தால்
2 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் 30,000 அபராதம் விதிக்கப்படும்.