உக்ரைன் எல்லை கிராமங்களை கைப்பற்றிய ரஷ்யா…

28 வைகாசி 2025 புதன் 08:38 | பார்வைகள் : 1693
உக்ரைன் எல்லையில் உள்ள நான்கு கிராமங்களை ரஷ்யா ராணுவம் கைப்பற்றி இருப்பதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக, ரஷ்யா மற்றும் உக்ரைன் போர் நடந்து கொண்டிருக்கிறது.
இந்த போரை நிறுத்த அமெரிக்கா தீவிர முயற்சி எடுத்த போதிலும், இரு நாடுகளும் தொடர்ந்து போரை நடத்தி வருகின்றன என்பதும், இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், உக்ரைனில் உள்ள சுமி என்ற பகுதியில் நான்கு எல்லையோர கிராமங்களை ரஷ்ய ராணுவம் கைப்பற்றியதாக கூறப்படுகின்றது.
அந்த கிராமங்களில் உள்ள மக்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டுவிட்டதாகவும் கூறப்படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
உக்ரைன் நாட்டை முழுவதுமாக கைப்பற்றுவதுதான் ரஷ்யாவின் எண்ணம் என அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறிய நிலையில், தற்போது உக்ரைன் பகுதிகளை ரஷ்ய ராணுவம் கைப்பற்றி வருகின்றமை பதட்டத்தை அதிகரித்துள்ளது.
2 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 19
இறப்பு : 28 Aug 2025