இலங்கையில் அரச சேவையில் நிலவும் 15,073 வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்பு

28 வைகாசி 2025 புதன் 10:46 | பார்வைகள் : 1312
அரச சேவையில் நிலவும் 15,073 வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
நேற்று முன்தினம் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இது தொடர்பில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
அரச சேவைக்கான ஆட்சேர்ப்பு செயன்முறையை மீளாய்வு செய்தல் மற்றும் ஆளணி முகாமைத்துவத்துக்காக பிரதமரின் செயலாளர் தலைமையில் நியமிக்கப்பட்டுள்ள குழுவினால் சமர்ப்பிக்கப்பட்ட இரண்டு அறிக்கைகள் ஊடாக 18 நிரல் அமைச்சுக்கள், 04 மாகாண சபைகள் மற்றும் 2 விசேட செலவு அலகுகளில் நிலவும் 15,073 வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கு விதந்துரை செய்யப்பட்டுள்ளது.
அதற்கமைய, குறித்த அறிக்கை மூலம் விதந்துரை செய்யப்பட்ட ஆட்சேர்ப்புகளை மேற்கொள்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.