Paristamil Navigation Paristamil advert login

பிரான்சின் ஐந்து நாள் அரசன்!

பிரான்சின் ஐந்து நாள் அரசன்!

19 சித்திரை 2016 செவ்வாய் 10:11 | பார்வைகள் : 20564


 பிரான்சில் முடியாட்சி இருந்த காலத்தில், ஒருவர் வெறும் 'ஐந்து' நாட்கள் மட்டுமே பிரான்சின் அரசராக இருந்தார். அந்த அரசனை பற்றி தெரிந்துகொள்வோம்!

 
* King John I என்பவரே இந்த 'ஐந்து நாள் அரசன்!' 15ம் திகதி நவம்பர் மாதம் 1316 ஆண்டு தொடக்கம், 20ம் திகதி, நவம்பர் மாதம் 1316 ஆம் ஆண்டு வரையான, ஐந்து நாட்கள் மட்டுமே இவர் அரசனாக இருந்தார். 
 
* இவர் பிறந்த திகதி தெரியுமா?? நவம்பர் 15, 1316 அன்று இவர் பிறந்தார். அதாவது பிறக்கும் போதே அரசனாக முடிசூட்டப்பட்டு பிறந்தார். சரி, இவர் இறந்த திகதியை பாருங்கள். 20 நவம்பர் 1316 அன்று இறந்தார். மயங்கிவிடாதீர்கள். தொடர்ந்து படியுங்கள்.
 
* Louis X அரசனுக்கும், அவரது மனைவி
  Clemenceக்கும் மகனாக பிறந்த இந்த குழந்தை, பிறந்து ஐந்து நாட்களில் இறந்துவிட்டான். அவன் உயிரோடு இருந்த ஐந்து நாட்களும் பிரான்ஸ் நாட்டின் அரசனாகவே இருந்தான். 
 
* உலகம் முழுவதிலும், தன் வாழ்நாள் முழுவதும் அரசனாக இருந்த ஒரே அரசன் King John I ஆகும். 
 
*அரசன் (?!??) இறந்ததற்கான காரணம் இதுவரை சரியாக சொல்லப்படவில்லை. விஷம் பருக்கப்பட்டு இறந்துள்ளார் என பொதுமக்களிடையே வதந்தி பரப்பப்பட்டது. 
 
* குழந்தை அரசன் இறந்தது பலருக்கு நன்மையாக அமைந்தது. 'எங்கள் அரசன் எப்படி இறந்தான்??!' என்ற பொதுமக்களின் கேள்விக்கு பதில் சொல்ல,  John'ன்னின் தந்தையால் முடியவில்லை. நெருக்கடி அதிகமாக அவரும் தற்கொலை செய்துகொண்டார். அவருடைய இறப்பும் இன்றுவரை ரகசியமாகவே இருக்கிறது. 
 
*பிறந்த குழந்தை அரசனாகவும், அந்த அரசன் வெறும் ஐந்து நாட்கள் மாத்திரமே அரசனாக இருந்ததும், தன் வாழ்நாள் முழுவதும் அவர் அரசனாக இருந்ததும் உலகத்தில் இவர் ஒருவருக்குத்தான் நிகழ்ந்திருக்கிறது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்