Paristamil Navigation Paristamil advert login

'இன்செண்டீஸ்' - வரலாறு படைத்த பிரெஞ்சு திரைப்படம்!

'இன்செண்டீஸ்' - வரலாறு படைத்த பிரெஞ்சு திரைப்படம்!

18 சித்திரை 2016 திங்கள் 10:45 | பார்வைகள் : 19046


 லெபனானில் பிறந்த கனேடிய எழுத்தாளரான 'வஜ்டி மெளவாட்' எழுதிய 'இன்செண்டீஸ்' நாவலை இயக்குனர் Denis Villeneuve, 2010ல் திரைப்படமாக அதே பெயரில் எடுத்தார். திரைப்படம் பிரெஞ்சு மற்றும் அரபிக் மொழியில் வெளியானது. 

 
திரைப்படத்தை பார்த்த ரசிகர்கள், மிரட்சியுடன் திரையரங்கை விட்டு வெளியே வந்தார்கள். நாவல் தந்த பாதிப்பை விட.. பல மடங்கு பாதிப்பை திரைப்படம் தந்திருந்தது. சிலருக்கு இந்த திரைப்படத்தின் முடிவு பேரதிர்ச்சியை கொடுத்தது மட்டுமில்லாமல், சில நாள் தூக்கத்தையும் கெடுத்தது. ரசிகர்கள் மத்தியில் இந்த திரைப்படம் குறித்த தகவல்கள் வேகமாக பரவின. 
 
'தி நியூயோர்க் டைம்ஸ்' பத்திரிக்கை வெளியிட்ட, 2011ம் ஆண்டின் சிறந்த பத்து திரைப்படங்களுள் இந்த 'இன்செண்டீஸ்' திரைப்படமும் இருந்தது. அதுமட்டுமில்லாமல், இருக்கும் அத்தனை பிரிவுகளிலும் 'விருதுகள்' குவித்தது. 
 
'31st Genie Awards' விருது வழங்கும் விழாவில் மாத்திரம் மொத்தம் எட்டு விருதுகளை வாரி குவித்தது. படம் கனேடிய திரைப்படம் என குறிப்பிட்டிருந்தாலும், பிரெஞ்சிலும், அரபிக் மொழியிலும் மாத்திரமே வெளியானது. 
 
6.8 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு தயாரிக்கப்பட்டிருந்த இத்திரைப்படம், 6,838,050 கனேடிய டொலர்களை வசூலித்திருந்ததாக விக்கிப்பீடியா சொல்கிறது. பிரெஞ்சு தேசத்துக்கு பெருமை சேர்ந்த இத்திரைப்படத்தை நீங்க அவசியம் ஒருதடவை பார்வையிடுங்கள்!,