PSG கழகம் வெற்றிபெற்றால் - சோம்ப்ஸ்-எலிசேயில் அணிவகுப்பு ஏற்பாடு!!

28 வைகாசி 2025 புதன் 22:46 | பார்வைகள் : 1862
சனிக்கிழமை இடம்பெற உள்ள சாம்பியன் லீக் சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டியில் PSG அணி வெற்றி பெற்றால், சோம்ப்ஸ்-எலிசேயில் பேருந்தில் அணிவகுப்பு இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜூன் 1, ஞாயிற்றுக்கிழமை மாலை இந்த அணிவகுப்பு இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏராளமான ரசிகர்கள் கூடியிருக்கும் போது, பலத்த பாதுகாப்பின் நடுவே வீரர்கள் பேருந்துகளின் அழைத்து வரும் அணிவகுப்பு இடம்பெறும் என தெரிவிக்கப்படுகிறது.
மே 31, சனிக்கிழமை இரவு 9 மணிக்கு போட்டி இடம்பெற உள்ளது. இதில் PSG அணி இத்தாலியின் Inter Milan அணியை எதிர்த்து விளையாடுகிறது.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்டுள்ள இந்த போட்டிகளுக்கான நுழைவுச் சிட்டைகள் அனைத்தும் விற்றுத்தீர்ந்துள்ளன.