Paristamil Navigation Paristamil advert login

பிரான்சில் அவசியம் பார்க்கவேண்டிய ஐந்து இடங்கள்

பிரான்சில் அவசியம் பார்க்கவேண்டிய ஐந்து இடங்கள்

16 சித்திரை 2016 சனி 07:31 | பார்வைகள் : 20260


பிரான்சில் உள்ள சுற்றுலாத்தலங்களில், எப்போதுமே ஈஃபிள் கோபுரத்துக்கே முதலிடம். 'ஈஃபிள் கோபுரத்தை பார்த்தே ஆகவேண்டும்' என்பதே 90 வீதமான சுற்றுலாப்பயணிகளின் எண்ணமாக இருக்கிறதாம்.  வெளியூரில் இருந்து உங்கள் உறவினர்கள் வந்தால், குடும்பத்துடன் ஈபிள் கோபுரத்தின் உச்சியில் ஏறி, ஒரு செல்ஃபி எடுத்து முகநூலில் பதிவிடுங்களேன்.??!!

 

சுற்றுலாப்பயணிகள் அதிகம் குவியும் இடங்களில் இரண்டாவது இடத்தில் லூவர் அருங்காட்சியகம் இருக்கிறது. காணக்கிடைக்காத பொக்கிஷங்கள் எல்லாம் இங்கே குவிந்திருக்கிறது. உலகம் முழுவதும் இருந்து சேர்க்கப்பட்ட 'மாஸ்ட்டர்பீஸ்' பொருட்கள் இங்கே அதன் வரலாற்றுடன் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கிறது. உங்களுக்கு இதில் ஆர்வம் அதிகம் என்றால், நிச்சயம் உங்களுக்கு ஒரு நாள் போதாது லூவர் அருங்காட்சியகத்தை பார்வையிட..!

 

பிரான்ஸ் முடியாட்சியின் மகிமையை உலகிற்கு தெரியப்படுத்துவதற்காக அமைக்கப்பட்ட Versailles அரண்மனை மூன்றாம் இடத்தில்...! அழகோ அழகு இந்த அரண்மனை. நீங்கள் இங்கு பார்ப்பதற்கு ஏராளமான விஷயங்கள் உள்ளன. கண்ணாடிகளாலான ஒரு பெரிய மண்டபம் இருக்கிறது இங்கே. மெய்மறந்துவிடுவீர்கள். இதன் வரலாற்றை கூகுள் செய்து பார்த்துவிட்டு சென்றால் இன்னும் ஆச்சரியமாக இருக்கும். 

 

 

பிரான்சில் இருந்துகொண்டு இங்கே செல்லவில்லையென்றால் எப்படி??! சுற்றுலாப்பயணிகளுக்கு மிகவும் மனம் கவர்ந்த இடமாக இருக்கிறது Côte d'Azur. கடும் நீலத்தில் அமைந்த கடலும், அமைதியான கடற்கரையும் அழகை வாரி இறைக்கிறது. இங்கிருந்து இத்தாலி கைக்கெட்டும் தூரம்தான். இணையத்தில் Côte d'Azur புகைப்படங்களை தேடிபார்த்து ஒரு முடிவுக்கு வாங்களேன்.

 

பிரான்சின் அடையாளங்களில் ஒன்றாக இருக்கிறது Mont Saint-Michel. கடலுக்கு நடுவில் இருக்கும் ஒரு பிரம்மாண்டமான 'பிரமிட்' இது. சுற்றிவர கடலை கொண்டும், உள்ளே பல பொக்கிஷங்களை கொண்டும் அமைதியாக உறங்குகிறது இந்த Mont Saint-Michel தீவு. அவசியம் இங்கே சென்று, இங்கிருக்கும் தேவாலயத்துகும் மறக்காமல் சென்று வாருங்கள்.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்