பிரான்சின் டைட்டானிக் கப்பல்

15 சித்திரை 2016 வெள்ளி 08:43 | பார்வைகள் : 23648
இருபதாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட மிகப்பெரிய பயணிகள் கப்பல்களில், 'குயின் எலிசபெத்' கப்பல் தான் மிகப்பெரியது. 1940ம் ஆண்டு கட்டிமுடிக்கப்பட்டு, வெள்ளோட்டம் விடப்பட்டது.
அதேபோல் 1912ம் ஆண்டு வெள்ளோட்டம் விடப்பட்ட 'டைட்டானிக்' கப்பல் பற்றியும் உங்களுக்கு தெரியும்..! இன்று, 'ஈஃபிள் கோபுரம்' போன்று மூன்று மடங்கு ஆழத்தில் கல்லறையாக இருக்கிறது டைட்டானிக்.
பிரான்சில் ஒரு 'டைட்டானிக்' இருந்தது. இருபதாம் நூற்றாண்டின் மிக அழகிய கப்பல் அது. அதுவரை கட்டப்பட்ட கப்பல்களில், வேகமாக இயங்கக்கூடிய கப்பல் அது! வாருங்கள் அதை பற்றி தெரிந்துகொள்ளலாம்.
'SS Normandie' என்பது அதன் பெயர். ஜனவரி மாதம் 26ம் திகதி, 1931ல் இக்கப்பல் கட்டும் பணி ஆரம்பித்தது. மிக குறைந்த காலத்தில், அதாவது ஒரு வருடத்துள்ளாகவே கப்பலின் 90 வீதமான வேலைகள் முடிவடைந்தது. மிக வேகமாக கட்டப்பட்ட கப்பல்களில், இந்த Normandie கப்பலுக்கும் ஒரு இடம் உண்டு.
இந்த கப்பலை பொதுமக்களுக்கு அறிமுகப்படுத்தி வைக்கலாம் என கப்பல் கட்டும் நிறுவனமான Saint-Nazaire நிறுவனம் முடிவெடுத்திருந்தது. 29ம் திகதி ஒக்டோபர் மாதம் 1932ல், இக்கப்பலை மக்கள் முன்னிலையில் அறிமுகம் செய்வதாக முடிவாயிற்று. ஆனால் அப்போது ஒரு சிக்கல் வந்திருந்தது. கப்பலுக்கு அப்போதுவரை பெயர் வைக்கப்படவில்லை.
குறித்த அந்த நாளான 29, ஒக்டோபர் அன்று அறிமுகத்திற்கான அனைத்து வேலைகளையும் முடித்து ஜொலிஜொலிப்பாக கப்பல் தயாராக நின்றது. அன்று தான் இந்த கப்பலை கட்டுவிக்கும் நிறுவனமான Compagnie Générale Transatlantique, இந்த அழகிய கப்பலுக்கு SS Normandie என பெயர் சூட்டியது.
கப்பல் தயாராக இருந்தும், மூன்று வருடங்களின் பின்னே, 29ம் திகதி மே மாதம், 1935ல் தான் தனது முதல் பயணத்தை தொடங்கியது Normandie. முதல் முதலாக Turbo-electric transmission தொழில்நுட்பத்தில் இயங்ககூடியதாகவும், அதிவேகமாக பயணிக்கக்கூடியதாகவும் இந்த கப்பல் இருந்தது.
இந்த கப்பல் அறிமுகம் செய்திருந்தபோது, பிரான்சின் மிகப்பெரிய கப்பலாக இது இருந்தது. இரண்டாம் உலகப்போரின்போது அமெரிக்கா Normandie கப்பலை பறிமுதல் செய்திருந்த சோக வரலாறும் இதற்கு உண்டு.
9 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025