முதலாம் உலகப்போரில் 33 கோடி 'ஷெல்'கள் வீசிய பிரான்ஸ் - சுவாரஷ்ய தொகுப்பு
14 சித்திரை 2016 வியாழன் 08:00 | பார்வைகள் : 19612
முதலாம் உலகப்போர் 28ம் திகதி, ஜூலை, 1914ம் ஆண்டு தொடங்கி, 11ம் திகதி, ஓகஸ்ட் மாதம் 1918ம் ஆண்டுவரை தொடர்ச்சியாக நடைபெற்றது. ஐரோப்பாவின் மத்தியில், குறிப்பாக பிரான்ஸ் - ஜேர்மனி எல்லைகளில் மிக ஆக்ரோஷமான சண்டை நடைபெற்றது. இந்த உலக யுத்தத்தின் போது மொத்தமாக 9 மில்லியன் படைவீரர்கள் கொல்லப்பட்டார்கள்.
ஒவ்வொரு நாடுகளும் பலத்த சேதங்களை சந்தித்திருந்தது. அதிலும் குறிப்பாக பிரான்ஸ் மிக மோசமாக பாதிக்கப்பட்டிருந்தது. இந்த சண்டையின் முடிவில் பிரான்சில் 20 பேர்களில் ஒருவர் என்ற கணக்கில் கொல்லப்பட்டிருந்தார்.
முதலாம் உலகப்போர் தொடங்கிய முதல் வருடமே (1914) பிரான்சுக்கு பாரிய உயிர்ச்சேதம் ஏற்பட்டது. ஒரு நாளைக்கு 2200 பேர்கள் வரை கொலப்பட்டனர். அதிலும், ஓகஸ்ட் மாதம் 22ம் திகதி, 1914ம் ஆண்டு பிரான்சுக்கு எதிராக நடந்த தாக்குதலில் பாரிய விளைவுகளை பிரான்ஸ் சந்தித்தது. அன்றைய ஒரு நாளில் மட்டும் 27 ஆயிரம் பிரெஞ்சு ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டார்கள்.
முதலாம் உலகப்போர் தொடங்கிய நாளில் இருந்து, முடிவிற்கு வந்த நாள் வரையான நான்கு வருடங்களில், பிரெஞ்சு வீரர்கள் கனரக பீரங்கி மூலம் மொத்தம் 33 கோடி 'ஷெல்'களை வெடிக்கச்செய்து, தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள்.
முதலாம் உலகமகா யுத்தம் முடிந்திருந்தபோது பிரான்சில் 7 லட்சம் பெண்கள் தங்கள் கணவர்களை இழந்திருந்தனர்.