எவரெஸ்ட் சிகரத்தில் 5,364 மீ உயரம் ஏறி சாதனை படைத்த திருநெல்வேலி சிறுமி

30 வைகாசி 2025 வெள்ளி 10:02 | பார்வைகள் : 2185
எவரெஸ்ட் சிகரத்தில் 5,364 மீட்டர் உயரம் ஏறி சாதனை படைத்த திருநெல்வேலி பள்ளி மாணவி, துணை முதலமைச்சர் உதயநிதியிடம் வாழ்த்து பெற்றார்.
தமிழக மாவட்டமான திருநெல்வேலியைச் சேர்ந்த 6 வயது பள்ளி மாணவி லலித் ரேணு. இவர் தனது தந்தையுடன் இணைந்து மலையேற்ற பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.
இவர், 6,000 அடி உயரம் உடைய வெள்ளியங்கிரி மலை முதல் பல்வேறு உயரமான இடங்களுக்கு ஏறி சென்றுள்ளார். அந்தவகையில் எவரெஸ்ட் சிகரத்தில் 5,364 மீட்டர் உயரம் ஏறி சாதனை படைத்துள்ளார்.
இந்நிலையில், நேற்று மாணவி அவரது பெற்றோருடன் தலைமைச் செயலகத்தில் துணை முதலமைச்சர் உதயநிதியை சந்தித்தார்.
அப்போது மாணவிக்கு வாழ்த்து தெரிவித்த உதயநிதி தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கேடயத்தை வழங்கினார். அதோடு தொடர்ந்து சாதனைகள் படைக்க வேண்டும் என்றும் கூறினார்.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1