காசா நோக்கிய கப்பலில் ரீமாஹசன்!!

30 வைகாசி 2025 வெள்ளி 11:16 | பார்வைகள் : 4179
பிரான்சின் கட்சியொன்றின் ஐரோப்பியப் பாராளுமன்ற உறுப்பினரர் ரிமா ஹசன (பிரெஞ்சு-பாலஸ்தீனியர்) சனிக்கிழமை ஒரு மனிதாபிமான கப்பலில் காசா நோக்கிப் பயணம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளார். அவருடன் சூடான் சுற்றுச்சூழல் போராளி கிரெட்டா துண்பெர்க் போன்றவர்கள் பங்கேற்க உள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர் தொடர்ச்சியாக இஸ்ரேலையும் பிரான்சிலுள்ள யூதர்களையும் தொடர்ந்து வெறுப்பைத் தெரிவித்து வரும் பிரான்சின் ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர் இவர் ஆவார்.
இந்த நடவடிக்கையின் நோக்கங்களாக
காசாவைச் சுற்றியுள்ள மனிதாபிமான தடையை கண்டனம் செய்தல்
இஸ்ரேலின் தாக்குதலைக் குற்றம்சாட்டுவது
சர்வதேச விழிப்புணர்வை உருவாக்குவது
இந்த முயற்சி 'சுதந்திர மிதக்கும் கூட்டமைப்பின்' Coalition de la flottille pour la liberté கீழ் அமைக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேல் மார்ச் 2-ஆம் தேதி துவங்கிய முழு தடையை சற்று தளர்த்தியுள்ள நிலையில் காசாவில் மிகவும் மோசமான மனிதாபிமான நிலைமை தொடர்கிறது.
2 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025