Paristamil Navigation Paristamil advert login

காஸா - பாலஸ்தீன மாநிலத்தை அங்கீக்க நிபந்தனை - எமானுவேல் மக்ரோன்

காஸா - பாலஸ்தீன மாநிலத்தை அங்கீக்க நிபந்தனை - எமானுவேல் மக்ரோன்

30 வைகாசி 2025 வெள்ளி 12:16 | பார்வைகள் : 932


பாலஸ்தீன மாநில அங்கீகாரம் என்பது அறநெறிப் பொறுப்பு மட்டுமல்ல, இது ஒரு அரசியல் அவசியம். ஆனால் சில நிபந்தனைகளுடன் மட்டுமே இதை செயல்வடிவம் பெற முடியும் என்றும் பிரான்ஸ் ஜனாதிபதி எமானுவேல் மக்ரோன் சிங்கப்பூரிலிருந்து  தெரிவித்துள்ளார்.

நிபந்தனைகளாக

ஹமாஸிடம் இருந்து பணயக் கைதிகள் மற்றும் இஸ்ரேலியர்களின் விடுதலை.

ஹமாஸ் அமைதியை  ஏற்று அரசியலில் பங்கேற்றல்

பாலஸ்தீன ஆட்சியின் மேம்பாடு

இஸ்ரேலை அங்கீகரித்தல் மற்றும் அதன் பாதுகாப்பிற்கான உரிமையை ஏற்கும் நிலை

பிராந்திய பாதுகாப்பு அமைப்பின் உருவாக்கம்

மக்ரோன் மேலும் ஐரோப்பிய ஒன்றியம் இஸ்ரேலுக்கு எதிராக தனது நிலைப்பாட்டை கடுமையாக்க வேண்டும் என்றும் கூறினார்.

இஸ்ரேல் மனிதாபிமான நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தவறினால், மனித உரிமைகள் மீறப்படுவதாக எண்ணி, தண்டனைகள் விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்தார்.
ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இஸ்ரேலுக்கு இடையிலான உறவுகள் மறுபரிசீலனைக்குட்படும் என்று எச்சரித்துள்ளார்.
 

வர்த்தக‌ விளம்பரங்கள்