நாய்களுக்கு ராஜமரியாதை - பரிஸ் முதலிடம்
12 சித்திரை 2016 செவ்வாய் 08:00 | பார்வைகள் : 20513
இந்த செய்தி உங்களுக்கு நம்பமுடியாமல் இருக்கலாம்.. ஆனால் இதுதான் உண்மை! செல்லமாக வளர்க்கும் நாய்களை ராஜமரியாதையுடன் நடத்துவதில், பிரான்சுக்கு தான் முதலிடமாம். அத்தனை மரியாதை கொடுத்து அக்கறையாக பார்த்துக்கொள்வார்களாம்.
பரிஸ் மக்கள் தங்களின் செல்லப்பிராணியான நாயை, தங்கள் பைகளிலோ, அல்லது கையில் வைத்திருந்தோ கொண்டு செல்வதை நீங்கள் அவதானித்திருப்பீர்கள். இது சுற்றுலாவரும் வெளிநாட்டவருக்கு பலத்த ஆச்சரியத்தை கொடுக்கிறதாம்.
அலுவலகங்களில் வேலைக்கு செல்லும் போது தங்கள் நாய்க்குட்டியையும் கொண்டு செல்வதை பார்த்து வியக்கிறார்களாம். திரையரங்கிற்கு செல்லும் போது, உணவு விடுதிகளில் சாப்பிட வரும்போது, கடைகளுக்கு பொருட்கள் வாங்க வரும்போது, இல்லையென்றால் வெளியூர் செல்லும் போது என தங்கள் நாய்களையும் உடன் அழைத்து செல்கிறார்களே என வியந்து பார்க்கிறார்களாம்.
சில உணவு விடுதிகள் 'Dogs not allowed' என பதாகை வைக்குமளவிற்கு இது பிரெஞ்சு மக்களுக்கு பிடித்தமான வேலையாகிவிட்டதாம். இப்போது நாய்களை அத்தனை மரியாதையாக நடத்துவதில் பாரிசுக்கு தான் முதலிடம் என ஒரு கருத்துக்கணிப்பு தகவல் வெளியிட்டிருக்கிறது.
'நாங்கள் எல்லாம் நடைபயிற்சி செய்யும் போதுதான் நாய்களை வெளியில் அழைத்து செல்வோம்!! ஆனால் பாரிசில் இருப்பவர்கள் அப்படியில்லை. கைத்தொலைபேசியை கொண்டுசெல்வது போல், தங்கள் நாய்க்குட்டியையும் கொண்டு செல்கிறார்கள்!!' என ஒரு லண்டன் பெண்மணி டுவிட்டரில் கருத்து தெரிவித்திருக்கிறார்.