Paristamil Navigation Paristamil advert login

பாரிசின் 'மிகச்சிறிய தெரு' பற்றி உங்களுக்கு தெரியுமா??

 பாரிசின் 'மிகச்சிறிய தெரு' பற்றி உங்களுக்கு தெரியுமா??

8 சித்திரை 2016 வெள்ளி 08:00 | பார்வைகள் : 18833


நீண்ட பரந்த சாலைகள் கொண்ட இந்த பிரான்சில் ஒரு மிகச்சிறிய தெரு இருக்கிறது. குறிப்பிட்ட தெருவுக்குள் செல்வதற்காக நீங்கள் அங்கு சென்றால்,  'இங்கு குறிப்பிட்ட அந்த தெருவே இல்லையே??!' என குழம்பி விடுவீர்கள். அவ்வளவு சிறிய தெரு அது! தொலைபேசியில் ஒரு 'ஹலோ!' சொல்வதற்குள் கடந்துவிடலாம். அதுவும் போவதற்கும் வருவதற்குமாக இரண்டு வழிகளை கொண்ட தெரு!! 'ஒருவேளை இது பொய்யாக இருக்குமோ?'  என நீங்கள் நினைப்பது புரிகிறது. வாருங்கள் பாரிசின் மிகச்சிறிய தெருவான Rue des Degrés இற்கு செல்வோம்!!

 
17ம் நூற்றாண்டில் அமைக்கப்பட்ட இந்த தெரு பிரான்சிலேயே மிகச்சிறிய தெரு ஆகும். Quartier de Bonne-Nouvelle  பகுதியில் அமைந்துள்ள இந்த தெருவின் நீளம் வெறும் 5.75 மீட்டர்கள் தான். அகலம் 3.30 மீட்டர்கள். மயங்கி விடாதீர்கள்!! 14 படிக்கட்டுக்களை கொண்டு இந்த தெரு அமைக்கப்பட்டுள்ளது. 
 
Rue de Cléry வீதிக்கும், Rue Beauregard  வீதிக்கும் இடையே ஊடறத்து செல்கிறது இந்த தெரு. ஒரு கடையின் வாசல் படிக்கட்டு போலே இருந்தாலும் ஒரு பக்கம் ஏறி மறுபக்கம் வந்தால் நீங்கள் நகரின் வேறொரு பக்கம் வந்துவிடுவீர்கள். 
 
 
இப்பகுதி மலைப்பிரதேசம் என்பதால் இதை படிக்கட்டுகளினால் அமைத்து பாதுகாத்து வருகின்றது பிரெஞ்சு அரசு. 17ம் நூற்றாண்டைச்சேர்ந்த தெரு என்பதாலும், பிரான்சின் மிகச்சிறிய தெரு என்பதாலும் இதை இன்னமும் 'ஒரு தெரு' என கணக்கில் கொண்டு பராமரிக்கிறது அரசு. 
 
2003ம் ஆண்டு வெளியான Monsieur Ibrahim et les Fleurs du Coran பிரெஞ்சு திரைப்படத்தில் புகழ்பெற்ற இந்த தெரு வருகிறது.  எந்த குடியேற்றங்களோ, கடைகளோ, மரங்களோ இல்லாத இந்த குட்டி தெரு வெறுமனே 14 படிக்கட்டுகளை மாத்திரமே கொண்டுள்ளது. 1650 ஆண்டு இந்த தெருவிற்கு Rue des Degrés என பெயர் வைத்ததாக விக்கிபீடியா சொல்கிறது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்