Paristamil Navigation Paristamil advert login

இம்மானுவல் மக்ரோனைச் சீண்டிய ட்ரம்ப்!!

இம்மானுவல் மக்ரோனைச் சீண்டிய ட்ரம்ப்!!

31 வைகாசி 2025 சனி 07:00 | பார்வைகள் : 2419


ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோனை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சீண்டியுள்ளார். மனைவி பிரிஜித்திடம் மக்ரோன் அடிவாங்குவது போன்ற காணொளி இணையத்தில் வைரலானதை அடுத்து, குறித்த காணொளி தொடர்பாக ட்ரம்ப் இந்த சீண்டலை பதிவு செய்துள்ளார்.

“அடுத்தமுறை கதவு மூடியுள்ளதை உறுதி செய்யவும்” என ட்ரம்ப் சிரிப்புடன் தெரிவித்துள்ளார். ட்ரம்பின் நிர்வாகத்திடம் இருந்து உலக பணக்காரர் எலான் மஸ்க் வெளியேறுவதாக அறிவித்ததை அடுத்து, நேற்று வெள்ளிக்கிழமை  இருவரும் கலந்துகொண்ட ஊடக சந்திப்பு இடம்பெற்றது. அதன் போது, ஊடகவியலாளர்கள் ட்ரம்பிடம் “மக்ரோன் அடி வாங்கும்” காணொளியை காண்பித்து கருத்துக் கேட்டிருந்தனர். அதன் போது, மக்ரோனைச் சீண்டும் வகையில், மேற்படி வசனத்தைக் கூறியிருந்தார்.

பின்னர் மக்ரோனை தொடர்பு கொண்டு நலம் விசாரித்ததாகவும், அவர் நலமுடன் உள்ளதாகவும் ட்ரம்ப் தெரிவித்தார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்