சீனாவின் புதிய பேராயுதம் - மிரமிக்கவைக்கும் உலகின் மிகப்பாரிய ட்ரோன் கேரியர்

31 வைகாசி 2025 சனி 11:52 | பார்வைகள் : 1667
உலக நாடுகளை மிரமிக்கவைக்கும் வகையில் உலகின் மிகப்பாரிய ட்ரோன் கேரியரை சீனா உருவாக்கியுள்ளது.
சீனா உருவாக்கியுள்ள 'ஜியு டியான்' (Jiu Tian) வானூர்தி, உலகிலேயே மிகப்பாரிய ட்ரோன் கேரியராக (Drone Carrier) அறிவிக்கப்பட்டுள்ளது.
இது ட்ரோன்களின் தாய் கப்பலாக (drone mothership) ஆக செயல்பட்டு, ஒரே நேரத்தில் 100 ட்ரோன்களை இயக்கும் திறன் கொண்டது.
11 டன் எடையுடன், மேலும் 6.6 டன் ட்ரோன் பாரத்தை எடுத்துச் செல்லும் திறன் கொண்ட இந்த வானூர்தி, 7,000 கிமீ தூரம் பயணிக்க முடியும்.
சர்வதேச அளவில் இது இராணுவ மற்றும் சிவிலியன் பயன்பாடுகளுக்காக உருவாக்கப்பட்டிருக்கிறது.
ட்ரோன் ஸ்வார்ம் (drone swarm) எனப்படும் குழு இயக்க முறையில் செயற்கை நுண்ணறிவை (AI) பயன்படுத்தி, இவை சீரான ஒத்துழைப்புடன் செயல்படும்.
இது போர் சூழ்நிலைகளில் எதிரியின் பாதுகாப்பு அமைப்புகளை முறியடிக்க பயன்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், இயற்கை பேரழிவுகளின் பின்னர் மீட்பு பணிகளில் கூட இதைப் பயன்படுத்த முடியும்.
இந்த ட்ரோன் mothership, சீனாவின் பாதுகாப்பு தொழில்நுட்ப வளர்ச்சியில் ஒரு முக்கிய அடையாளமாக பார்க்கப்படுகிறது.
இருப்பினும், இது உண்மையில் போர் சூழல்களில் எவ்வளவு பயனுள்ளதாக இருக்கும் என்பது சந்தேகத்திற்குரியது என பாதுகாப்பு நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.