துணை முதல்வர் பதவி எனக் கூறி கூட்டணிக்கு அழைத்தார்கள்; சீமான்

1 ஆனி 2025 ஞாயிறு 12:46 | பார்வைகள் : 898
துணை முதல்வர் பதவி தருவதாகக் கூறி தன்னை அ.தி.மு.க., கூட்டணிக்கு வருமாறு ஆதவ் அர்ஜூனா அழைத்ததாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
பிரபல நடிகர் ராஜேஷின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பிறகு அவர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது;
தமிழ் திரையுலகில் மறக்க முடியாத ஒரு பெரும் ஆளுமை ராஜேஷ். கன்னிப்பருவத்திலே, பயணங்கள் முடிவதில்லை என மிகச்சிறந்த படங்களில் அவரது பங்களிப்பு இருக்கும். திரைக்கலைஞராக எல்லோரும் அறிந்திருப்பார்கள். ஒரு மிகச்சிறந்த இலக்கிய ஆர்வலர், எழுத்தாளர், ஜோதிடக் கலை நிபுணர். ஒரு அறிவுப் பெட்டகமாக வாழ்ந்து கொண்டிருந்தார்.
எனக்கு மூட்டை மூட்டையாக புத்தகங்களை அனுப்புவார். அவர் அனுப்பிய புத்தகங்களை என்னுடைய நூலகத்தில் தனியாக வைத்துள்ளேன். நாங்க சந்திக்கும் போது எல்லாம் திரைப்படங்கள் பற்றி பேசிக் கொள்வது குறைவு தான். இலக்கியம், உலக அரசியலை பற்றி தான் பேசுவோம். சிவக்குமார், சரத்குமார், அர்ஜூனைப் போல ராஜேஷூம் உடல்நலத்தை பேணுவார், என்றார்.
மற்றொரு பேட்டியில், அ.தி.மு.க., பா.ஜ., குறித்து த.வெ.க., நிர்வாகி ஆதவ் அர்ஜூனா பேசியது பற்றி சீமானிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அவர் பதிலளிக்கையில், 'புரணி பேசுவதற்கு எல்லாம் நான் கருத்து சொல்ல முடியுமா என்ன? இதே ஆதவ் அர்ஜூனா தான் என்னை அ.தி.மு.க., கூட்டணிக்கு வருமாறு அழைப்பு விடுத்தார். துணை முதல்வர் பதவியும் தருகிறோம் என்றார். அதுக்கு என்ன பண்ணுவது,' என்று சிரித்தபடி கூறிவிட்டு சென்றார்.
4 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025