Paristamil Navigation Paristamil advert login

பிரான்ஸ் வானொலி நிலையங்கள் - சில சுவாரஷ்ய தகவல்கள்!

பிரான்ஸ் வானொலி நிலையங்கள் - சில சுவாரஷ்ய தகவல்கள்!

28 பங்குனி 2016 திங்கள் 08:00 | பார்வைகள் : 20576


ரேடியோவை மார்கோனி கண்டுபிடித்ததாக நாம் படித்திருக்கிறோம். இத்தாலியை சேர்ந்த இவர் ரேடியோவை கண்டுபிடிக்கும் முயற்சியில் 24 வருடங்கள் ஈடுபட்டு இறுதியில் 1897ல் ஒருவழியாக ரேடியோவை கண்டுபிடித்து உலகத்திற்கு அறிமுகம் செய்து வைத்தார்.

 

உலகின் முதல் வானொலி நிலையம் மார்கோனியின் பெயரிலேயே 1895ல் ஆரம்பமானது. அதாவது ரேடியோ அறிமுகம் ஆவதற்கு இரண்டு வருடங்கள் முன்னரே வானொலி நிலையம் ஆரம்பிக்கப்பட்டாயிற்று. மார்க்கோனி மைக் முன்னாடி அமர்ந்து Checking என சொல்லிக்கொண்டிருந்தாராம்.

 

XWA என்பதுதான் உலகின் முதலாவது துல்லியமான வானொலி நிலையம். இது 1919ம் ஆண்டு டிசம்பர் மாதம் கனடாவில் ஆரம்பிக்கப்பட்டது. அதுவரை காலமும் ஆங்காங்கே பரீட்சாத்த முயற்சிகள் நடைபெற்றுக்கொண்டிருந்தன.

 

1921ம் ஆண்டு பிரான்ஸின் முதல் வானொலி நிலையமாக Radio Tour Eiffel எனும் பெயரில், ஈஃபிள் டவரின் மூன்றாம் தளத்தில் இருந்து ஒலிபரப்பு செய்யப்பட்டது. ஒரு நாளைக்கு 30 நிமிடங்கள் மாத்திரமே ஒலிபரப்பாகியது.

முக்கிய அறிவித்தல்கள், அரச செய்திகள் போன்ற நிகழ்ச்சிகள் (??!!) அதில் ஒலிபரப்பாகின.

 

1922ம் ஆண்டு RadioLa எனும் பெயரில் ஒரு வானொலி நிலையம் பிரான்ஸில் ஆரம்பிக்கப்பட்டது.  உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்ட இந்த வானொலி நிலையம் மொத்தமாக இரண்டே வருடங்கள் தான் இயங்கியது.

 

பின்னர் சில வருடங்கள் கழித்து RadioLa, Radio Paris எனும் பெயரில் தனது ஒலிபரப்பை தொடங்கி இன்றுவரை வெற்றிகரமாக தொடர்கிறது. இடையில் இரண்டாம் உலகப்போரை சந்தித்திருக்கிறது இந்த வானொலி நிலையம்.

 

ஆனாலும் பல ஆண்டுகள்வரை பிரான்ஸில் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் கொண்ட வானொலி நிலையம் இருக்கவில்லை. பின்னர் 1963ம் ஆண்டு Paris Inter எனும் வானொலி நிலையம் பொதுமக்களின் பொழுதுபோக்கிற்காக ஆரம்பிக்கப்பட்டது.

 

பிரெஞ்சு மக்களின் பிரதான  பொதுபோக்கு  ரேடியோ கேட்பதாக மாறியது.

 

அதன் பின்னர் பல ரேடியோக்கள் படையெடுக்க ஆரம்பித்தன. விதம் விதமான நிகழ்ச்சிகள், ஆர்.ஜே. க்கள் என களைகட்டியது.

 

இன்று பிரான்ஸில் மொத்தம் 160 இற்கு மேற்பட்ட வானொலிகள் இருப்பதாக தரவு சொல்கிறது. இதில் பிரஞ்சு, ஆங்கிலம், ருஷ்யா, ஆப்பிரிக்கா, ஜேர்மனி உட்பட 20இற்கும் மேற்பட்ட மொழிகளில் வானொலிகள் பிரான்ஸிற்குள் இருக்கின்றன.

 

இப்போது தொலைக்காட்சி, இணையம் என உலகம் மாறிவிட்டாலும்... இன்றும் பிரெஞ்சு மக்களில் பொழுபோக்குகளில் ரேடியோ கேட்பது தொடர்ந்துகொண்டே வருகிறது!

 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்