இன்றைய கொண்டாட்டங்களும் செல்லவேண்டிய வழிகளும்!!

1 ஆனி 2025 ஞாயிறு 12:36 | பார்வைகள் : 1522
PSG - இன்டர் மிலான் சோம்ப்ஸ் எலிசேவில் கொண்டாட்ட ஊர்வலம் – இடங்கள், நேரம், நுழைவுகள், எல்லாவற்றையும் தெரிந்துகொள்ளுங்கள்
2025 ஜூன் 1, ஞாயிறு, PSG தனது UEFA சாம்பியன்ஸ் லீக் வெற்றியை ரசிகர்களுடன் இணைந்து பாரிஸின் சோம்ப்ஸ் எலிசேவில் கொண்டாடுகிறது. Inter Milan அணியை 5-0 என்ற கணக்கில் தோற்கடித்த PSG, தங்கள் வரலாற்றில் முதல் முறையாக கோப்பையை வென்றது.
ஊர்வலத் திட்டம்
தேதி: 2025 ஜூன் 1, ஞாயிறு
நுழைவு: பிற்பகல் 14:30 மணி முதல்
ஊர்வலம் துவக்கம்: மாலை 17 மணி
இடம்: Champs-Élysées - Paris
நுழைவு: தெற்கு பக்கமாக மட்டும் — வடக்கு பக்க நுழைவுகள் முழுமையாக மூடப்படும்
நுழைவுகளுக்கான மெட்ரோ நிலையங்கள்
Invalides (மெட்ரோ 8, 13 / RER C)
Alma-Marceau (மெட்ரோ 9) / Pont de l’Alma (RER C)
Victor Hugo (மெட்ரோ 2) / Boissière (மெட்ரோ 6)
கவனம்: சில மெட்ரோ நிலையங்கள் மூடப்படும் அதனால் மாற்று வழித்திட்டங்களைத் திட்டமிடுங்கள்.