இலங்கையில் AI பயன்படுத்தி இருவரை தேடும் பொலிஸார்

2 ஆனி 2025 திங்கள் 17:06 | பார்வைகள் : 3734
இலங்கையில் AI (செயற்கை நுண்ணறிவு) தொழில்நுட்பத்தை குற்றப் புலனாய்வு திணைக்களம் முதன்முறையாக பயன்படுத்தி, சந்தேகநபர்கள் இருவரின் முகங்களை ஒத்த, புகைப்படங்களை வடிவமைத்து, பொதுமக்களின் உதவியை நாடியுள்ளது.
குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் கொலை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் தொடர்பான விசாரணை பிரிவு இந்த படங்களை அனுப்பிவைத்துள்ளது.
தென் மாகாணத்தில் இடம்பெறும் பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய இரண்டு சந்தேக நபர்களின் புகைப்படங்களை AI தொழில்நுட்பத்தை (செயற்கை நுண்ணறிவு) பயன்படுத்தி வடிவமைத்துள்ளனர்.
இந்த புகைப்படங்களில் உள்ள நபர்கள் தொடர்பில் ஏதேனும் தகவல்கள் கிடைத்தால் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் கொலை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் தொடர்பான விசாரணை பிரிவு 071 - 8592867 அல்லது 074 - 1357642என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பு கொள்ளுமாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
5 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1