Paristamil Navigation Paristamil advert login

பரிஸ் : நடுவீதியில் தீப்பிடித்து எரிந்த பேருந்து

பரிஸ் : நடுவீதியில் தீப்பிடித்து எரிந்த பேருந்து

4 புரட்டாசி 2023 திங்கள் 17:49 | பார்வைகள் : 5567


நேற்று ஞாயிற்றுக்கிழமை பரிசில் பேருந்து ஒன்று தீப்பிடித்து எரிந்துள்ளது. அதிஷ்ட்டவசமாக சம்பவத்தின் போது பயணிகள் எவரும் பேருந்தில் இருக்கவில்லை.

பரிசின் சுற்றுவட்ட வீதியில் Porte d'Orléans அருகே இச்சம்பவம் நேற்று இரவுஇடம்பெற்றுள்ளது. 62 ஆம் இலக்க பேருந்து ஒன்று வீதியில் பயணித்த நிலையில், திடீரென மகிழுந்து தீப்பிடித்து எரிந்துள்ளது. பேருந்தை உடனடியாக நிறுத்திய சாரதி, பேருந்தில் இருந்து இறங்கி தப்பி ஓடியுள்ளார்.

RATP நிறுவனத்துக்குச் சொந்தமான மின்கலத்தினால் இயங்கக்கூடிய hybrid பேருந்துஒன்றே தீப்பிடித்து எரிந்துள்ளது. கடந்த 2022 ஆம் ஆண்டு ஏப்ரலின் பின்னர் பரிசில்பதிவாகும் மூன்றாவது பேருந்து தீப்பிடித்து எரிந்த சம்பவம் இதுவாகும். 

வர்த்தக‌ விளம்பரங்கள்