Paristamil Navigation Paristamil advert login

வெற்றிபெறும் போதெல்லாம் வன்முறையாளர்களாக மாறும் பிரெஞ்சுக்காரர்கள்!!

வெற்றிபெறும் போதெல்லாம் வன்முறையாளர்களாக மாறும் பிரெஞ்சுக்காரர்கள்!!

2 ஆனி 2025 திங்கள் 22:03 | பார்வைகள் : 4310


PSG யூரோ சாம்பியன் லீக் வெற்றிக் கொண்டாட்டங்களில், பரிஸ் சாம்-எலிசேவிலே கடைகள் மீது தாக்குதல் மற்றும் கொள்ளைகள் நடந்துள்ளன. 

நான்கு கடைகள் முழுமையாக கொள்ளையடிக்கப்பட்டுள்ளன, பல கண்ணாடிகள் உடைக்கப்பட்டுள்ளன. Foot Locker போன்ற கடைகளில் ஊழியர்கள் திங்கட்கிழமை கடை திறக்க வந்தபோது சேதங்களை கண்டு, காவல்துறையினர் பாதுகாப்பு போதிய அளவில் இல்லை என புகார் தெரிவித்துள்ளனர்.

8வது மாவட்ட மேயர் ஜேன் ஓத்சேர்(Jeanne d'Hauteserre), இந்த வன்முறைகளால் வணிகர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். அவர் இனி சோம்ச்-எலிசேவில் ஆபத்தான விழாக்களை தடை செய்ய வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார். 

மேலும் பரிஸ் ஒலிம்பிக்கில் பயன்படுத்தியது போன்ற AI  வீடியோ கண்காணிப்புக்களை அமைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்