Paristamil Navigation Paristamil advert login

நடைப்பயிற்சியை எவ்வாறு ஆரம்பிக்க வேண்டும்

நடைப்பயிற்சியை எவ்வாறு ஆரம்பிக்க வேண்டும்

1 தை 2023 ஞாயிறு 17:00 | பார்வைகள் : 9473


 உடற்பயிற்சி செய்ய முடியாதவர்கள் தினமும் 30 நிமிடம் நடைப்பயிற்சி செய்து வந்தால் போதுமானது. முதன் முதலாக நடைப்பயிற்சியை ஆரம்பிப்பவர்கள் கவனிக்க வேண்டிய விதிமுறைகள் உள்ளன. அவை என்னவென்று பார்க்கலாம்...  

 
எடுத்த எடுப்பில் நீண்ட நேரம் நடக்க வேண்டாம். முதல் வாரம் 5 நிமிடங்கள் மட்டும் நடக்கவேண்டும். அடுத்த வாரம் அதனை 8 நிமிடங்களாக அதிகரியுங்கள்.  பயிற்சியானது உங்களுக்கு களைப்பு இளைப்பு இன்றி வசதியாக இருந்தால் அடுத்த வாரத்திலிருந்து அதனை 11 நிமிடங்களாக அதிகரியுங்கள்.  
 
படிப்படியாக உங்கள் தேவைக்கு ஏற்ப நடைப் பயிற்சியின் நேரத்தை அதிகரியுங்கள். படிப்படியாக அதிகரிப்பதன் மூலம் உங்களது இருதயம், சுவாசப் பை மற்றும் கால்களுக்கு திடீரென எந்தப் பாதிப்பும் ஏற்படாது. அவை தங்களைத் தாங்களே பழக்கப்படுத்தி தொடர்ந்து செய்வதற்குத் தயாராகிவிடும்.  
 
நடைப் பயிற்சிக்கு ஏற்ற காலணிகளை புதிதாக வாங்கிக் கொள்ளுங்கள். இறுக்கமான, அடி தேய்ந்த வார் அறுந்த காலணிகள் வேண்டாம். நடைப் பயிற்சி உங்களுக்கு நலத்தைக் கொண்டு வரும். நடைப்பயிற்சி மனதிற்கு பிடித்ததாக இருக்க வேண்டும். வேண்டா வெறுப்பாக அக்கறையின்றிச் செய்ய வேண்டாம். 
 
துணைவர் அல்லது நண்பருடன் பேசிக்கொண்டு நடக்கலாம். பூந்தோட்டம், கடல், ஏரி, கடைகள் என எதையாவது ரசித்துக் கொண்டு நடக்கலாம். ஆனால் பேசுவதிலும், ரசிப்பதிலும் பார்ப்பதிலும் உங்கள் அடிப்படை நோக்கத்தை மறக்கக் கூடாது. நடையின் வேகம் தடைப்படாது இருப்பதை உறுதி செய்யுங்கள்.  பாதுகாப்பான இடமாகப் பார்த்து நடைப் பயிற்சியை மேற்கொள்ளுங்கள்.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்