Paristamil Navigation Paristamil advert login

வருகிறது தேஜஸ் விமானம்; ஜூனுக்குள் ஒப்படைக்க உறுதி

வருகிறது தேஜஸ் விமானம்; ஜூனுக்குள் ஒப்படைக்க உறுதி

4 ஆனி 2025 புதன் 12:02 | பார்வைகள் : 1061


அதிநவீன தொழில்நுட்பங்களுடன் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட, 'தேஜஸ் மார்க் - 1ஏ' இலகுரக போர் விமானம் இம்மாத இறுதிக்குள் நம் விமானப்படையிடம் ஒப்படைக்கப்படும்' என ஹெச்.ஏ.எல்., நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த விமானத்தின் இன்ஜினை அமெரிக்காவின், 'ஜெனரல் எலக்ட்ரிக் ஏரோஸ்பேஸ்' நிறுவனம் வடிவமைத்து தர ஒப்பந்தம் மேற்கொண்டது.

இதற்கிடையே, புதிய இன்ஜின்களை ஒப்படைப்பதில் அந்நிறுவனம் தொடர்ந்து காலம் தாழ்த்தியதால், இதுவரை நம் விமானப்படையிடம் தேஜஸ் போர் விமானங்களை ஹெச்.ஏ.எல்., நிறுவனம் ஒப்படைக்கவில்லை.

இதை, நம் விமானப்படையின் தலைமை தளபதி அமர் பிரீத் சிங் வெளிப்படையாகவே பல முறை விமர்சித்தார். சமீபத்தில் நடந்த நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற அவர், இந்த விவகாரத்தை சுட்டிக்காட்டி பேசினார்.

இந்நிலையில், மஹாராஷ்டிராவின் நாசிக்கில் அமைந்துள்ள ஹெச்.ஏ.எல்., நிறுவனத்தின் உற்பத்தி மையத்தில் தயாரிக்கப்பட்ட முதல் தேஜஸ் மார்க் - 1ஏ போர் விமானத்தை, இம்மாத இறுதிக்குள் விமானப்படையிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அந்நிறுவனம் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்