Paristamil Navigation Paristamil advert login

சீன கார்கள் ஐரோப்பிய சந்தையை ஆக்கிரமித்துள்ளன: PFA தலைவர் எச்சரிக்கை!!

சீன கார்கள் ஐரோப்பிய சந்தையை ஆக்கிரமித்துள்ளன: PFA தலைவர் எச்சரிக்கை!!

4 ஆனி 2025 புதன் 14:14 | பார்வைகள் : 2637


ஐரோப்பிய கார் தொழில்நுட்பம் மோசமான நிலைமையில் இருப்பதாக பிரான்சின் PFA (Plateforme Automobile) தலைவர் லூக் ஷாட்டல் (Luc Chatel) இன்று காலை தெரிவித்துள்ளார். 

சீன கார் நிறுவனங்கள் குறைந்த விலையில் உயர்தர வாகனங்களை உற்பத்தி செய்வதால் ஐரோப்பிய சந்தையை ஆக்கிரமித்துள்ளன. இதன் காரணமாக, ஐரோப்பிய கார் விற்பனை தொடர்ந்து குறைவடைந்து வருகிறது, மேலும் நுகர்வோர் மின்சார கார்களுக்கு மாற தயங்குவதால் ஒரு கட்டமைப்புசார்ந்த நெருக்கடி உருவாகியுள்ளது.

2035ல் பெட்ரோல்/டீசல் கார்களின்  விற்பனைக்கு தடை செய்வதை, அமுலாக்கும் திட்டம் இப்போது சவாலாக காணப்படுகிறது. மின்சார வாகன விற்பனை குறைவாக உள்ளதால் இந்த இலக்கை அடைவது கடினம் என லூக் ஷாட்டல் தெரிவித்துள்ளார். 

அதற்கு பதிலாக, தொழில்நுட்பத்திலும் புதுமையிலும் நம்பிக்கை வைக்க வேண்டும் என்றும், கொஞ்சம் நெகிழ்வாக இருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்