Bondy : மனைவிக்கு கத்திக்குத்து... கணவர் தற்கொலை முயற்சி!

5 ஆனி 2025 வியாழன் 07:52 | பார்வைகள் : 6191
மனைவியை கத்தியால் குத்தி கொன்றுவிட்டு தற்கொலைக்கு முயன்ற கணவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஜூன் 4, நேற்று புதன்கிழமை காலை இச்சம்பவம் Bondy (Seine-Saint-Denis) நகரில் இடம்பெற்றுள்ளது. Rue Lucie-Aubrac வீதியில் உள்ள வீடொன்றில் இருந்து காலை 8 மணிக்கு காவல்துறையினருக்கு கிடைத்த தகவலை அடுத்து, அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு இரு பெண்கள் கத்திக்குத்துக்கு இலக்காகி இரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளனர். அத்தோடு நபர் ஒருவர் தற்கொலைக்கு முயன்றுள்ள நிலையில், அவர் மீட்கப்பட்டு கைது செய்யப்பட்டார்.
கத்திக்குத்துக்கு இலக்கான இரு பெண்களில் ஒருவர் கைது செய்யப்பட்டவரின் மனைவி எனவும், மற்றவர் மனைவியின் சகோதரி எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இதில் மனைவி உயிரிழந்துள்ளார். அவரது சகோதரி உயிருக்கு போராடும் நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1