Paristamil Navigation Paristamil advert login

மாணவர்களுக்கு புற்றுநோய்க் கிருமிகளை தடுக்கும் தடுப்பூசி. பிரான்ஸ் சுகாதாரம் அமைப்பு.

மாணவர்களுக்கு புற்றுநோய்க் கிருமிகளை தடுக்கும் தடுப்பூசி. பிரான்ஸ் சுகாதாரம் அமைப்பு.

5 புரட்டாசி 2023 செவ்வாய் 08:18 | பார்வைகள் : 14130



ஒவ்வொரு ஆண்டும் 6400 புதிய புற்றுநோயாளர்களை (papilloma) 'பப்பிலோமா' என்னும் வைரஸ் உருவாக்குகிறது. சிறிய வயதில் தொற்றிக் கொள்ளும் குறித்த வைரஸ், நாளடைவில் பிறப்புறுப்பு, ஆசனவாய், மார்பு, தொண்டைக்குழி, கருப்பை போன்ற உடல் உறுப்புகளில் புற்றுநோய் கிருமிகளை உருவாக்குகிறது.

இதனால் சிறுவயதிலேயே 'papillom' வைரஸ் எதிர்ப்பு தடுப்பூசியை செலுத்திக் கொண்டால் எதிர்காலத்தில் குறித்த உடல் உறுப்புகளில் புற்றுநோய் இல்லாத சந்ததிகளை உருவாக்க முடியும் என பிரான்ஸ் சுகாதர அமைப்பு தெரிவிக்கிறது.

எனவே பாடசாலைகளில் நேற்றையதினம் முதல் தடுப்பூசி முகாம்களை அமைத்து 4ம்,5ம் வகுப்பு மாணவர்களுக்கு இலவசமாக தடுப்பூசி ஏற்றம் பணி ஆரம்பிக்கப் பட்டுள்ளது.

இந்த தடுப்பூசி மனிதர்களுக்கு பின்நாளில் பின்விளைவுகளை ஏற்படுத்துமா என்னும் கேள்விக்கு பதிலளித்த சிறுவர் நல மருத்துவத் துறையின் செய்தித் தொடர்பாளர் வைத்திய கலாநிதி Christèle Gras Le Guen .

'நிட்சயமாக இல்லை, ஆனால் இந்த தடுப்பூசி குறித் உடல் உறுப்புகளில் ஏற்படும் புற்றுநோய் கிருமிகளை 90% சதவீதம் இல்லாது ஒழிக்கிறது. இந்த தடுப்பூசியை இளவயதினர் மட்டும் அன்றி வளர்ந்தவர்களும் செலுத்திக் கொள்ளலாம் ' என பதிலளித்தார்.

பிரான்ஸ் முழுவதும் உள்ள பாடசாலைகளில் பெற்றோரின் ஒப்புதலுடன் 'papilloma' வைரசுக்கு எதிரான தடுப்பூசி எற்றும் பணி துரிதப்படுத்தப் படும் என கல்வித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்