உலகிலேயே முதல்முறையாக Nintendo Switch 2 பிரான்ஸில் வெளியீடு: Fnac-ல் திரளும் கேமிங் ரசிகர்கள்!
5 ஆனி 2025 வியாழன் 16:15 | பார்வைகள் : 3243
நிண்டெண்டோ ஸ்விட்ச் 2 (Nintendo Switch 2) வியாழக்கிழமை, ஜூன் 5 அன்று பிரான்ஸில் வெளியாகியுள்ளது. விலை 469 யூரோ என்றாலும், ரசிகர்கள் கடைகளில் நள்ளிரவு முதல் குவிந்துள்ளனர்.
பரிஸ் Fnac Saint-Lazare-இல் மட்டும் 500 பேர் வரை நள்ளிரவு வரிசையில் நின்றுள்ளனர். சிலர் மூன்று மணி நேரமாக காத்திருந்தனர். "உலகிலேயே முதலிலே வாங்குகிறோம்" என்ற பெருமிதம் கூட அந்த உற்சாகத்துக்கு காரணமாகும்.
கேமிங் ரசிகர்கள், புதிய மாரியோ கார்ட் கேம் மற்றும் accessories கூட சேர்த்து வாங்கிக்கொண்டனர். மேலும் சிலர் வேலைவிடுப்பு எடுத்துக்கொண்டு, கொன்சோலை அனுபவிக்கத் திட்டமிட்டுள்னர்.
Fnac மற்றும் Micromania போன்ற கடைகள் இரவு முழுவதும் திறந்திருந்தன. நிறுவனத்தின் படி, 30,000-40,000 முன்பதிவுகள் வந்துள்ளன, இது ஸ்விட்ச் 1-ஐ விட இரண்டு மடங்கு அதிகமாகும்.
அனைவருக்கும் கொன்சோல் கிடைக்கும் என்று உறுதியளிக்கப்பட்டது. 2017-ல் ஸ்விட்ச் 1, ஒரே வாரத்தில் 100,000 யூனிட்கள் விற்பனையானது. ஸ்விட்ச் 2 அதனை முறியடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது பிரான்ஸில் இந்த வருடத்துக்கான மிகப்பெரிய கேமிங் வெளியீடாக அமைந்துள்ளது.


























Bons Plans
Annuaire
Scan