லியோனல் மெஸ்ஸி மீது தண்ணீர் போத்தல் வீச்சு...மைதானத்தில் பதற்றம்
5 புரட்டாசி 2023 செவ்வாய் 08:47 | பார்வைகள் : 8245
லியோனல் மெஸ்ஸி மீது தண்ணீர் போத்தல் வீச்சு மற்றும் ரசிகர் கட்டியணைக்க முற்பட்டது ஆகிய இரண்டு சம்பவங்கள் பரபரப்பை ஏற்படுத்தியது.
MLS தொடரில் இன்டர் மியாமி அணி 3-1 என்ற கோல் கணக்கில் LAFC அணியை வீழ்த்தியது.
போட்டி முடிந்ததும் நட்சத்திர வீரர் மெஸ்ஸி மைதானத்தை விட்டு வெளியேறினார்.
அப்போது தண்ணீர் போத்தல் அவர் மீது வீசப்பட்டது.
அதிர்ஷ்டவசமாக மெஸ்ஸி மீது போத்தல் படவில்லை.
எனினும், மெஸ்ஸி சற்று பதற்றமடைந்தார்.
அதேபோல் அவரது பின்னால் வந்த பாதுகாவலர் நடுங்கிப்போனார்.
இதுதொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.
மேலும் ஆட்டத்தின் போது ஒரு சம்பவமும் நடந்தது.
73 வது நிமிடத்தில் பார்சிலோனா அணி ஜெர்சியை அணிந்திருந்த ரசிகர் ஒருவர் மைதானத்திற்குள் அத்துமீறி நுழைந்தார்.
அவர் நேராக மெஸ்ஸியை கட்டிப்பிடிக்க முயன்றபோது பாதுகாவலர் அவரை மடக்கிப் பிடித்தார்.
பின்னர் அவர் வெளியே அனுப்பப்பட்டார்.
இதுவும் மைதானத்தில் சற்று பரபரப்பை ஏற்படுத்தியது.


























Bons Plans
Annuaire
Scan