மேலதிகமாக ஒருமணிநேரம் - கோடைகால terrasses!!
5 ஆனி 2025 வியாழன் 17:58 | பார்வைகள் : 4303
கோடைகாலத்தின் போது உணவகங்கள், அருந்தகங்களின் முன்பாக அமைக்கப்படும் முற்றங்களுக்கு (terrasses) இம்முறை மேலதிகமாக ஒருமணிநேரம் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு வருடமும் கோடை காலத்தின் போது இரவு 10 மணி வரை இந்த அனுமதி வழங்கப்பட்டு வரும் நிலையில், இவ்வருடத்தில் இரவு 11 மணி வரை இந்த சிறப்பு அனுமதி வழங்கப்பட உள்ளது.
ஜூன் 21 ஆம் திகதி முதல் செப்டம்பர் 14 ஆம் திகதி வரை இந்த முற்றங்களுக்கான அனுமதி வழங்கப்படுவதாக பரிஸ் நகரசபை அறிவித்துள்ளது.
அண்மைய மாதங்களில் பரிஸ் உணவகங்கள் மற்றும் அருந்தகங்கள் எதிர்கொள்ளும் வருவாய் இழப்பை சீர்ப்படுத்த இந்த சிறப்பு ஒருமணிநேரம் அனுமதிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

























Bons Plans
Annuaire
Scan