வெள்ளை குருமா

2 ஆடி 2025 புதன் 18:46 | பார்வைகள் : 132
இட்லி, தோசைக்கு, தொட்டுக்கொள்ள சூப்பரான வெள்ளை குருமா செய்யாலாம். இந்த வெள்ளை குருமா இட்லி, தோசைக்கு மட்டுமல்லாமல் சப்பாத்திக்கு, பூரிக்கும் அட்டகாசமாக இருக்கும். குறிப்பாக இது குழந்தைகளும் விரும்பி சாப்பிடும் வகையில் சூப்பராக இருக்கும்.
தேவையான பொருட்கள்: வெங்காயம் - 2 (பெரியது)தேங்காய் - 1/2 கப் (துருவியது)பாதாம் - 10சோம்பு - 1 டீஸ்பூன்எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்கடுகு - 1/2 டீஸ்பூன்கறிவேப்பிலை - 1 கொத்துபச்சை மிளகாய் - 4(நறுக்கியது) பட்டை, சோம்பு, அன்னாசிப்பூ 5 பல் பூண்டு தக்காளி - 1உப்பு - தேவையான அளவுகொத்தமல்லி - சிறிது (நறுக்கியது)
செய்முறை : அரைக்க: துருவிய தேங்காய், பாதாம், சோம்பு போட்டு சிறிது தண்ணீர் சேர்த்து மிக்சியில் நைசாக அரைத்துக்கொள்ளவும்.
சமைக்க : முதலில் ஒரு கடாயில் எண்ணெயை ஊற்றி, எடுத்து வைத்திருந்த பட்டை, கிராம்பு, அண்ணாச்சி பூ, வெட்டிய வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.
இதனுடன் பூண்டு தக்காளி பச்சை மிளகாய் கொஞ்சம் புதினா தேவையான அளவு உப்பு போட்டு நன்றாக வதக்கி வைக்க வேண்டும். அதன் பிறகு அரைத்து வைத்திருந்த மசாலா பேஸ்ட்டை அதனுடன் சேர்த்து பத்து நிமிடம் கழித்து இறக்கினால் சுவையான ஆனியன் வெள்ளை குருமா தயாராகிவிடும்.
இதனை அப்படியே பூரி சப்பாத்திக்கு சேர்த்து சாப்பிட்டால் ஒரு பூரி சாப்பிடற குழந்தை கூட 3, 4 சப்பாத்தி சாப்பிடுவாங்க அந்த அளவுக்கு சுவை சூப்பரா இருக்கும்.