நள்ளிரவில் போக்குவரத்து சோதனையின் போது காவல்துறை அதிகாரி தாக்கப்பட்டார்!
.jpeg)
2 ஆடி 2025 புதன் 18:21 | பார்வைகள் : 1151
மெர்சிடிஸ் (Mercedes) காரை ஓட்டிவந்த நபர், வழக்கமான சாலை கண்காணிப்பின் போது ஒரு காவல்துறையினரை தாக்கி, பின்னர் தப்பியோடியதாக கூறப்படுகிறது. அவரும், அவருடன் இருந்த இருவர் உட்பட மூவர் தற்போது காவல்துறையினரால் தேடப்பட்டு வருகின்றனர்.
செவ்வாய்க்கிழமை இரவு நேரத்தில் அந்தோனியில் (Antony) காவல்துறையினர் வாகனத்தை சோதனை செய்தபோது, காவல்துறை அதிகாரி ஒருவர் தாக்கப்பட்டதால் கால்களில் வலி ஏற்பட்டுள்ளது.
ஓட்டுனர் காவல்துறை அதிகாரியை தாக்கிய பின்னர் காரில் மீண்டும் ஏறி, தப்பித்துள்ளார். ஓட்டுனர் உட்பட மூவரும் அடையாளம் காணப்படவில்லை, அவர்கள் தற்போது தேடப்பட்டு வருகின்றனர்.